,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

jypj; mwpf;if
jPHkhdq;fs;
khehl;Lf; fl;Lius;
NeHfhzy;
khehL
fpof;fpd; RaepHzak;

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

05/05/2008

 

'யாழ்ப்பாணியம்'

நல்ல முகமூடி ஈழத்தமிழ்த் தேசியம்.  

  யாழ்ப்பாணத்தில் தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்கிறது. 

இதை கனடாவில் ஒருபாலுறவுசார்ந்த கருத்தியலைப் பற்றிப் பேச வந்த ஓர்க்வில் நிருபாமா என்ற பெயரில் ஒழிந்திருக்கும் ஒருயாழ்ப்பாணி-  இதை எழுதினார்.

இப்படி ஒருவர் கனடாவில் எழுதுவதில்லை அப்படி ஒருவரும் கனடாவில் இல்லை என்றே அனைவரும் சொல்கிறார்கள் இதுபற்றி அதே இணையத்திற்கு நான் மறுத்து எழுதிய மூன்று நிமிடத்தில் அந்தக் கட்டுரையிலிருந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆக என்னால் இந்த மோசமான கருத்தியலுக்கு அந்த இணையத்தின் ஆசிரியரையே குற்றஞ்சாட்ட முடியும். நான் அவரிடம் கேட்டு எழுதியது தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்பதில் வருகின்ற நாங்கள் என்பதற்குள் மறைந்திருக்கும் சாதி எது? என்பதுவே. கவனமாகக் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் - நாங்கள் என்ற சொல்லாடலுக்குள் இருக்கின்ற மிக முக்கியமான தளம் பற்றி கருத்துக்கெடுக்காதவர்கள் இவர்கள். அந்தக் கருத்தாக்கம் தருகின்ற வன்முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பாதவர்கள் இவர்கள்;. இவர்கள் எல்லோரும்தான் தம்மை ஈழத்தேசியவாதி களாக அடையாளப்படுத்துகிறார்கள். இந்த ஈழத்தேசியவாதிகள் மீது நாம் எவ்வகையான அவதானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.             

    (   மற்றது சஞ்சிகையிலிருந்து)

 

 

 

  4/05/2008

எதிர் வரும் மாகாணசபைத்தேர்தலில்

ஜனநாயகத்தைப் பேணுவோம்!

தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!!  

  ( தொடர்ச்சி)  

 

 

 

 

30/04/2008

 

 

கற்பிதப்படுத்தப்பட்ட புனிதங்களில் ஒன்று 

நன்றி 'சஞ்சாரம்'

மனிதராய் இருத்தல்... ...மனிதராய் விளங்கல்....

(   மீராபாரதி)    

 

இரண்டாவது அடையாளமிடல் சாதி தொடர்பானது. ஏந்த சமூகத்தில் அல்லது குடும்பத்தில் பிறக்கின்றோமோ அச் சமூகத்திற்கு குடும்பத்திற்கு உரித்தான சாதிய அடையாளம் நம் மீது திணிக்கப்படுகின்றது. மனிதர்களுக்கு திணிக்கப்படும் இந்த சாதிய அடையாளம் உயர் சாதி என அழைக்கப்படுபவர்களுக்கு அல்லது அடக்கும் சாதிகளுக்கு, அவர்கள் வாழ்க்கையில்; பெரும்பாலும் சாதகமாகவே அமைகின்றது. ஆனால் கீழ் சாதி என அழைக்கப்படுபவர்களுக்கு அல்லது அடக்கப்படும் சாதிகளுக்கு பாதகமானதாகவே இருக்கின்றது.  கடந்த கால சாதிய வரலாற்று ஆய்வுகளை மீள நோக்கும் பொழுது அல்லது ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது மனிதர்கள் தாம் சார்ந்த தொழில் அடிப்படையிலையே பிரிக்கப்பட்டு இச் சாதிய அடையாளங்களை பெற்று விளங்குகின்றனர். இந்தப் பிரிவினைகள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது என்பது ஆய்வு செய்ய விரும்புகின்றவர்கள் செய்ய்லாம். இன்றைய நமது புரிதல் இந்தப் பிரிவினைகள் நியாயமற்றவை. மனிதர்களில் ஒரு சாரார் தாம் நன்றாக வாழ்வதற்காக மனிதர்களின் ஒரு பிரிவினரை இச் சாதிய அடையாளத்தினுடாக பயன்படுத்தி உள்ளார்கள். இன்றும் பயன்படுத்துகின்றனர். இது மனிதர்களின் சுதந்திரத்தை மறுப்பதாகவும் அவர்களது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றது. அன்று மட்டுமல்ல இன்றும் ஒவ்வவொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள் சுதந்திரமானவர்கள் சுய  அடையாளம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் எந்த வகையிலும் தாம் பிறந்த சமூகத்தின் அல்லது குடும்பத்தின் சாதிய அடையாளத்தை அல்லது தொழிலை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதுவாக விளங்க வேண்டியதும் இல்லை. ஆனால் சாதிய அடக்குமுறை அவர்களின் தனி மனித சுதந்திரத்தை உரிமைகளை மறுத்து அவர்கள் சார்ந்த சமூகத்தை அதன் அடையாளத்தை பின்பற்ற நிர்ப்பந்திக்கின்றது. சாதிய சங்கங்களோ சாதிய அரசியலோ இந்த அடக்குமுறைகளிலிருந்து  விடுதலையைப் பெற்றுத்தராது. மாறாக, இவை மேலும் இந்த அடையாளங்களை வலுப்படுத்தவே உதவி செய்யும். மற்றம் சிலருக்கு அரசியல் தொழில் செய்வதற்கும் ஆய்வுகள் செய்வதற்கும் ஊன்று கோலாக இந்த அடையாளங்கள் இருக்கும். ஆகவே, இத் திணிக்கப்பட்ட சாதிய அடையாங்களில் இருந்து விடுபட்டு விடுதலை பெறுவதே அடக்கப்பட்ட மற்றும் அடக்கும் சாதிகளை சேர்ந்த மனிதர்களுக்கு விடுதலையையும் விமோசனத்தையும் தரும். அதாவது நமது இயற்கையான மனித அடையாளத்தை பெறுவதே “மனிதராய் இருத்தல்” என்பதற்கு வழி சமைக்கும். ( தொடர்ச்சி)

 

 

 

 

 

 

17/04/2008

தலித்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து  

                                                                                                                                               
பாலா 

 

 

 

 

வெருகல் படுகொலை - 4 வது ஆண்டு நினைவு தினம்

 

 

 

அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் ஏவலாளிகள் கிழக்கு மாகாணத்துக்குள் புகுந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய 175 போராளிகளை கொன்று வீசிய நாள். பெண்போராளிகளை மானபங்கம் செய்து குற்றுயிராக்கி கொலைவெறியாடிய நாள். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் இந்தபடுகொலையை நிறைவேற்றியதன் ஊடாக எந்தவரலாற்றின் தொடக்கத்தைக் கட்டிப்போட வன்னிப்புலிகள் முயன்றனரோ அந்த வரலாறு இன்று நிமிர்ந்து நிற்கிறது. அன்று கொன்று வீசப்பட்ட கிழக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அந்த கொடிய நாளை கரிநாளாக அனுஸ்டிக்கும் கிழக்குமாகாண மக்களுடன் எமது முன்னணியும் கரம்கோர்த்துக் கொள்கிறது.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

10-04-2008

 

kilakku@hotmail.com

 

08-04-2008

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் திஸ விதாரண விடம் தலித் அறிக்கை கையளிப்பு

 

6-4-2008 ஞாயிறு லண்டனில் இலங்கை ஜனநாய ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இலங்கை அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பிரதிநிதகள் குழுவைச்சேர்ந்த 12 உறுப்பினர்கள் கலந்து 

கொண்டனர். அதன் தலைவர் திஸ விதாரணவும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின் ஏற்பாட்டாளர்களான இலங்கை ஜனநாயக ஒன்றியமானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரையும் அழைத்திருந்தனர். இக்கலந்துரையாடலில் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் சார்பாக தலைவர் தேவதாசன் அவர்கள் உரையாற்றியதோடு தலித் அரசியல் அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.

'தலித் அறிக்கை' கையளிக்க முன் ஆற்றப்பட்ட உரை வருமாறு.

மதிப்புக்குரிய திஸ்ஸ விதாரண அவர்களுக்கும், சர்வகட்சி பிரதிநிதிகளுக்கும் மற்றும் சபையினருக்கும் வணக்கம்.

நான் உங்களிடம் கேள்விகள் கேட்பதற்கு இங்கு வரவில்லை. மாறாக ஓர் அறிக்கையினை உங்களிடம் சமர்ப்பிப்பதற்காகவே வந்துள்ளேன். உங்களுக்கு பல அரசியல் கட்சிகளும், மக்கள் மன்றங்களும் பலதரபட்ட அரசியல் தீர்வுத்திட்டங்களையும் அலோசனைகளையும் வழங்கியிருப்பார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும் தீண்டாமைக் கொடுமைக்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகம், கடந்த கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் கொடூரமான யுத்தத்தால் மிகவும் துன்புற்று வாழுகிறார்கள். இம்மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தும் அரசியல் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் எதுவும் உங்களுக்கு கிடைத்திருந்ததாக நாம் அறியவில்லை.

1977ம் ஆண்டு வரை சாதியின் பெயராலொடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க பலவித போராட்டங்களையும் உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். அப்போராட்டத்திற்கு உறுதுணையாக தமிழ் இடதுசாரிகளும், சிங்கள இடதுசாரிகளும் முஸ்லிம் முற்போக்கு சக்திகளும் உதவியுள்ளனர். 1977ம் ஆண்டு தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியதன் காரணமாக கடந்த முப்பது வருடங்களாக சாதிய விடுதலை பற்றிய பேச்சு பேசாப் பொருளாகி கிடப்பில் போடப்பட்டது. இந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களாக தலித் சமூக மக்களே உள்ளனர். உண்பதற்கு உணவும், இருப்பதற்கு வீடும், உழைப்பதற்கு தொழிலும் அற்றவர்களாக பெரும் துன்பத்தில் வாழும் தலித் மக்களுக்கு வெளிவரப்போகும் அரசியல் தீர்வுத்திட்டத்தில் அவர்களது சமூக அரசியல் பொருளாதரத்தை மேம்படுத்தும் முகமாக விசேட தீர்வுகள் முன்வைக்கப்பட்டு அது அரசியல் சட்டமாக்கப்பட வேண்டுமென இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

2006ம் ஆண்டு நவம்பர் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் சகல ஐரோப்பிய ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கி நடாத்தப்பட்ட இரு நாள் மாநாட்டில் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஓர் 'தலித் அறிக்கையை' வாசித்து வெளியிட்டோம். இவ்வறிக்கையானது 2007 ஒக்டோபர் மாதம் 20,21ம் திகதிகளில் பாரிசில் நடாத்தப்பட்ட 1வது தலித்மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் ஒப்புதலையும் பெற்றுக் கொண்டது.அதனைத் தொடர்ந்து 2008 பெப்ரவரி 16,17ம் திகதிகளில் லண்டனில் நடாத்தப்பட்ட 2வது தலித் மாநாடும் இவ்வறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டது. நேற்றைய தினம் (05ஃ04ஃ2008) இம்மண்டபத்தில் நிகழ்ந்த இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் ( SLDF) கூட்டத்திலும் 'தலித் அறிக்கையை' முன் வைத்தோம்.

இன்று ஒரே மேடையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினரான உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எமது 'தலித் அறிக்கையை' உங்கள் முன்வைக்க கிடைத்த சந்தர்பமும் மிகவும் மகிழ்ச்சிக்குரியதே.

மதிப்புக்குரிய திச விதாரன அவர்களுடைய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சமாதானத்தினதும் ஜனநாயகத்தினதும் வருகைக்காக காத்துக் கிடக்கிறார்கள். எனவே நீங்கள் முன்மொழியும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் தலித் மக்களின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்டு 'தலித் அறிக்கை'யில் எம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளையும் இடம்பெறச் செய்து சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டுமென்று கேட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை எமக்கு வழக்கிய இலங்கை ஜனநாயக ஒன்றியத்துக்கு நன்றியையும் தெரிவித்து, விடைபெற்று, தீர்வுக்காகக் காத்திருக்கிறோம்.

 

புஸ்பராஜாவின்  இரண்டாவது நினைவு தினமும் அவரது படைப்பிலக்கியத் தொகுப்பின் அறிமுகமும்

 

 

 

 

 

 
 
 
 
 
 

 

 

 

 

 

                                        

                                                                                                                           

                                                                                     
  
                                                                                              இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால்
                                                                                       பிரசுரமாகும் மாதாந்த பத்திரிகை    [தொடர்புகளுக்கு]