,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு                                    22/06/2008

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

35ஆவது இலக்கிய சந்திப்பு ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் யூன் 14 ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் பல நாடுகளிலிருந்தும் அநேகமானோர் வந்து கலந்து கொண்டனர். சிவராஜா அவர்கள் வரவேற்புரையை; நிகழ்த்திய பிற்பாடு 

 

வந்தவர்களின் சுய அறிமுகங்களுடன் முதலாம் நாள் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து இலக்கியச் சந்திப்பின் ஸ்தாபகர்களில் மூத்தவரான மறைந்த தோழர் பராமாஸ்டர் அவர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படக் காட்சிகள் பார்வைக்குள்ளாக்கப்பட்டது.

 

அடுத்த நிகழ்ச்சியாக புகலிட சஞ்சிகைகளானஉயிர்மெய்  ‘உயிர்நிழல்’ சஞசிகைகளுடன் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளியிடப்பட்டுவரும் ‘வடு’ எனும் பத்திரிகையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதில் 'உயிர்மெய்' சஞ்சிகையை நோர்வேயிலிருந்து வருகைதந்த சரவணன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். ‘உயிர்நிழல்’ சஞ்சிகையை பிரான்சிலிருந்து கலந்து கொண்ட பிரதீபன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அடுத்ததாக ‘வடு’ எனும் பத்திரிகையை அதன் ஆசிரியர் குழுவிலொருவரான தேவதாசன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். பொதுவாகவே அவர்கள் மாற்று சஞ்சிகைகள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் பற்றிக் கூறியதோடு அதன் வெளியீட்டுச்சிரமங்கள் பற்றியெல்லாம் பேசினார்கள். குறிப்பாக ‘வடு’ பத்திரிகை பற்றிக் கூறிய தேவதாசன் அவர்கள் தலித் சமூகங்களின் நலன் சார்ந்து வெளிவரும் ‘வடு’ பத்திரிகையானது மிக எளிமையான புரிதலுக்குரிய மொழிநடையில் வெளியிட வேண்டும்  என்பதே எமது நோக்கம் என்றும் கூறினார்.  

 

 

தொடர் நிகழ்வாக லக்சுமி அவர்களின் நெறிப்படுத்தலில் இணைய சஞ்சிகைகள் எனும் தலைப்பில் சரவணன் உரை நிகழ்த்தினார். இணைய சஞ்சிகைகளின் தோற்றங்களும் அதன் வளர்ச்சி நிலைகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசியதோடு, அதை இலகுவாக பயன் படுத்தும் வழி முறைகளை சகலரும் அறிந்து கொள்ளும் சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார். தமிழிலே இணைய சஞ்சிகைகள் அதிகளவு சுதந்திரமாக வெளிவருதற்கு புலிகளிலிருந்து  கருணாவின் வெளியேற்றமும் ஒரு  காத்திரமான பின்புலம் என்றே கூறலாம். எனவும் குறிப்பிட்டார்.  இந்நிகழ்வின் தலைப்பு தொடர்பான கலந்துரைடயால் நிகழ்வில் ‘தேசம்’ இணையத்தளம் பல்வேறுவகையான விமர்சனங்களுக்குள்ளானது.

 

35 ஆவது இலக்கியச் சந்திப்பின் முதல் நாள் அமர்வின் இறுதி நிகழ்வாக 1985 ஆம் ஆண்டு வெளிவந்த patrick suskind   என்பவரின்  das parfum,die geschichte eines morders   எனும் ஜேர்மன் மொழி நாவல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாவலை  ஜேர்மனியைச் சேர்ந்த விரிவுரையாளரான அனெற்ற எனும் பெண்மணி  அறிமுகப்படுத்தியதோடு அந்நாவலின் அனைத்து உள்ளடக்கத்தையும் விளக்கியுரைத்தார். அவரின் ஜேர்மனிய மொழியுரையை சுசீந்திரன் அவர்கள்  எமக்கு மிகச் சிறப்பான வகையில் தமிழில் மொழிபெயர்த்தார். மேற்படி நாவலானது ஜேர்மனிய இயக்குணரான tom tykwer    என்பவரால்  திரைப்படமாக்கப்பட்டும் உள்ளது. அது பிரான்ஸ் மொழியில் le parfum  -histoire d’un mertrier-   எனும் பெயரில் 2006 இல் திரையிடப்பட்டது.    

 

 இரண்டாம்   நாள்   அமர்வின்   முதலாவது   நிகழ்வாக          ‘இலங்கையில் சிறுபான்மை  இனங்களுக்கு  இடையிலான இன்றைய நிலை’ எனும் தலைப்பில் உரையாடல் ஆரம்பமானது. இவ்வுரையாடலை பௌசர் அவர்கள் நெறிப்படுத்த நிர்மலா, சரவணன், கலையரசன், அசுரா, ராகவன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். இவர்களது உரையாடலில் கிழக்குமாகாணத்தின்  இன்றைய நிலை, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனை, மலையகமக்களின் வாழ்வியலும், அவர்கள் துயரங்களும், தலித் சமூகத்தின் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசப்பட்டது. இதில் பலரும் இலங்கைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள அரசினால் சிறுபான்மை இனங்களுக்கு இழைக்கப்படும் அரசியல் விரோதங்கள் பற்றிப் பேசியபோதும், தலித் சமூகம் சார்ந்து உரையாற்றிய அசுரா அவர்கள் பேசப்படும் இலங்கைப் பேரினவாதம்  எனும் கருத்து நிலையில் தமக்கு உடன் பாடில்லை என்பதாகப் பேசினார். தமிழ்த் தேசவிடுதலை எனும் பெயரில் தொடங்கப்பட்ட அநியாயத்திற்குள் (போராட்டம்) சிக்குண்டு போனவர்கள் தலித் சமூகத்தினர்.  அப்போராட்டமானது தலித் சமூக நலன் சார்ந்த போராட்டமல்ல. தலித் சமூகங்கள் மீது யாழ் மேலாதிக்கத்தினால்    இழைக்கப்பட்ட சமூக ஒடுக்கு முறைக்கெதிரான ஓர் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ்த் தேசிய விடுதலை எனும் அநியாம் நிகழத்தொடங்கியது. அதனுள் தலித் சமூகமும் உள்வாங்கப்பட்டதானது ஒரு துயரமான நிகழ்வாக அமைந்தது. தலித் சமூகங்களின் சமூக வளர்ச்சிக்காக சிங்கள இனம் காட்டிய அக்கறையை வரலாறு தொலைத்துவிடவில்லை.    யாழ்   மேலாதிக்கத்திற்கு   எதிராக நிகழ்ந்த போராட்டங்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக வழக்காடுவதற்காக தமிழ் தேசிய வடுதலையைக் கோரிய 'அப்புக்காத்துப்' போராளிகள் எவரும் முன்வராதபோது சிங்களச் சட்டத்தரணிகளே தலித் சமூகங்களின் சார்பாக வழக்காட முன்வந்தவர்கள். இதுபோல் பல சம்பவங்களை நாம் கூறலாம். எனவேதான் சிங்களப் பேரினவாதம் எனும் கருத்து நிலையில் எமக்கு உடன் பாடில்லை என்பதாக அசுரா அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.

 

மேற்படி தலையங்கத்தில் நிகழ்ந்த கருத்துரைப்புகளைத்; தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.  குறிப்பாக தற்போதைய கிழக்கு மாகாணத்து நிலைமை பற்றி அதிகமாகப் பேசப்பட்டது.

 

பெண்குரல் அவிழ்க்கும் இணைய    இதழான 'ஊடறு'இணைய ஸ்தாபகர்களால் வெளியிடப்பட்ட    ‘மை’, ‘இசை பிழியப்பட்ட வீணை’ எனும் தலைப்பைக் கொண்ட இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் விமர்சனம் செய்யப்பட்டது. அவ்விமர்சனத்தை உமா அவர்கள் நிகழ்த்தினார்.

 

சுமதி அவர்களின் ஆங்கிலக் கவிதை நூலான ‘Like Myth and Mother’   எனும் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிகிறார் சுமதி சிவமோகன் அவர்கள்.  ஐரோப்பிய பெண்கள் சந்திப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான  றஞ்சி அவர்கள் அவரது நூலின் அறிமுகத்தை செய்தார்.

 

 

அடுத்ததாக இந்தியாவிலிருந்து வருகைதந்த இலக்கிய வாதியான அம்பை அவர்கள் ‘பெண் எனும் நிலை-உடல்-மொழி மற்றும் வெளிப்பாடு’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அந்நிகழ்வை  நிர்மலா அவர்கள் நெறிப்படுத்தினார். இலக்கியத்திலும், சமூகத்திலும்  பெண்களைச் சித்தரிக்கும் ஆணாதிக்க மனநிலைகள் பற்றிய சம்பவங்களை கதை கூறும் மொழியில் பேசினார்.  

 

‘புஸ்பராஜாவின் படைப்புக்கள்’ எனும் தலைப்பைக் கொண்ட மறைந்த புஸ்பராஜாவின் நூல் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை சிவராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் மீரா, மங்கை, சுகன் ஆகியோர் அவ்விமர்சனத்தில் பங்குகொண்டனர். இறுதி நிகழ்வாக ’தீண்டத்தகாதவன்’ எனும் ஈழத்து தலித் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை சுசீந்திரன் அவர்கள் விமர்சனம் செய்தார்.

 

கிருஸ்ணா அவர்கள் நன்றியுரையாற்றினார்.;

 

36ஆவது இலக்கியச் சந்திப்பு நோர்வேயில் நடைபெற உள்ளது

 

 

                                        

                                                                                                                           

                                                                                     
  
                                                                                              இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால்
                                                                                       பிரசுரமாகும் மாதாந்த பத்திரிகை    [தொடர்புகளுக்கு]