,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

 

தலித்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

 

தமிழ் சமூகம் எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் சாதி ஒடுக்குமுறைகள் அல்லது சாதி ஏற்றத்தாழ்வு மோதல்கள் இடம் பெறுகிற போதெல்லாம் அது ஒரு குழு மோதல் என்ற வகையில் பிரச்சனைகள் குறுக்கப்பட்டு உடனேயே மூடி மறைக்கப்படுகிறது. அதற்கு மாறாக அதன் அடிப்படைத் தன்மைகளை ஆய்வு செய்து அதன் அடி நாதமாகிய சாதிய அமைப்பு வடிவத்தை அழித்தொழிக்க யாரும் முன்வருவதாக இல்லை. இந்த வகையில் அண்மையில் சுவிஸ் நாட்டிலும் கூட சாதி மோதல் நடைபெற்றதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. தமிழன் விமானம் ஏறும்போதே உடுப்பதற்கு உடையும் உண்ண உணவும் கொண்டு போகிறானோ இல்லையோ கலாச்சாரத்தின் பேராலும் மதத்தின் பேராலும் சாதியை மட்டும் தூக்கிச் சென்றுவிடுகின்றான். அதன்மூலம் சாதி ஒடுக்குமுறையை செய்ய முடியாவிட்டாலும் சாதியை இழிவு படுத்தும் சொற்கள் செயல்கள் தாராளமாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.

அவர்களது அதிகாரம் அல்லாத நாடுகளிலேயே சாதியை தக்கவைப்பதில் தீவிரம் காட்டும் தமிழன் சொந்தமண்ணில் எப்படி நடந்து கொள்வான் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

வேலணை என்னும் கிராமத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு குறிச்சிவாரியாகவே வாழ்ந்து வருகின்றனர். எத்தனையோ யுத்தம் எத்தனையோ இடப் பெயர்வு நிகழ்ந்தாலும் சாதிகள் மட்டும் எந்தக் குறிச்சியும் மாறாமல் அப்படியே வாழ்ந்து வருகிறது. வேலணையில் தலித்துக்கள் வாழும் பகுதியில் உணவு சமைக்க ஒரு தண்ணீரும் குளிப்பதற்கு ஒரு இடமும் குடிக்கும் தண்ணீர் எடுக்க ஓர் இடமுமாக அலைக்கழிந்த வாழ்க்கையை நீண்ட காலமாகவே வாழ்ந்து வருகின்றனர். சமைக்கும் தண்ணீர் தமது வீட்டுக் கிணறுகளில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். அதுவும் கடும் கோடைக்காலத்தில் கிணற்றுத் தண்ணீர் வற்றிவிடும். குளிப்பதற்கும் உடுப்புத் தோய்ப்பதற்கும் கடற்கரையை நோக்கி சென்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பொதுக்கிணத்தில் அத்தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். குடிப்பதற்கான தண்ணீர் அதில் இருந்து முன்னூறு மீற்றர் தூரத்தில் நல்ல தண்ணீர் கிணறு என அழைக்கப்படும் (இதுவும் இச்சாதிக்கென ஒதுக்கப்பட்டது.) இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்கின்றனர். 

 

இப்படியாக தண்ணீருக்கு ஒவ்வொரு இடத்திற்கும் அலையும் இம்மக்கள் கூட்டத்தின் துன்பம் பல ஆண்டுகளாகவே தொடர்கதையாக தொடர்கிறது.
இவர்கள் குடிக்கும் நீர் எடுத்த நல்ல தண்ணீர்க் கிணற்றைச் சுற்றி புதுக் குடியேற்றமாக பல வீடுகள் உருவாக்கப்பட்டபோது இக்கிணற்றுக்குப் பக்கத்திலும் புதிதாக விஸ்ணு கோயிலும் உருவாக்கப்பட்டது. இக்கோயில் மெல்ல மெல்ல வளர்ந்து பெரிய கோயிலாக மாறிவிட தலித்துக்கள் காலம் காலமாக குடி தண்ணீர் எடுத்துவந்த நல்ல தண்ணீர்க் கிணறு விஸ்ணுவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. விஸ்ணு அத்தண்ணீயில் குளிக்கிறாரோ, குடிக்கிறாரோ தெரியாது தலித் மக்கள் குடி தண்ணீர் எடுக்க முடியாமற் போய்விட்டது. இதனால் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாட்டி என்னும் இடத்தில் இருந்து தண்ணீர் காவ வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இத்துன்பம் பற்றி யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இக் கொடுமைக்குள் தள்ளப்பட்டுள்ள தலித்மக்களும் ஏதும் நடவடிக்கை எடுக்க திராணி அற்றவர்களாகவும், கடவுள் விடயத்தில் தாம் கைவைத்தால் தம் தலை தெறித்து விடும் என்ற மூட நம்பிக்கையிலும் இதுதான் நம் விதியென வாழ்கின்ற கொடுமை வேலணையில் மட்டுமல்ல யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இப்படிப் பல பிரச்சனைகள். கற்றவர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் தமிழர்களெல்லாம் ஒன்று என தம்பட்டம் அடிப்பவர்களும் கண்டும் காணாமல் ஒழிந்து கொண்டு நல்லபிள்ளை வேடம் போட்டு நடிக்கும் கபடர்களாகவே வாழ்கின்றனர். ஆனால் விழித்துக்கொள்ள வேண்டியவர்கள் இக்கொடுமைக்கு உட்பட்டிருக்கும் எமது தலித்மக்களே.
 
யாழ்ப்பாணத்தில்இருந்து
பாலா

 

 
 

                                        

                                                                                                                           

                                                                                     
  
                                                                                              இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால்
                                                                                       பிரசுரமாகும் மாதாந்த பத்திரிகை    [தொடர்புகளுக்கு]