,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

jypj; mwpf;if
jPHkhdq;fs;
khehl;Lf; fl;Lius;
NeHfhzy;
khehL
fpof;fpd; RaepHzak;

 

 

 

Declaration

Resolution

                   

 

 

 

 

ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓh அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையே இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




உலக மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது அரசு, சொத்து, குடும்பம் எனப் பிரிவினைகள் தோன்றியபோதே நிலை பெறத் தொடங்கியதாக நாம் வரலாறுகள் மூலமாக அறிகிறோம். இவ்வாறான சமூக வேறுபாடுகளை பொருளாதார (வர்க்க) வேறுபாடாகவும், பாலியல் வேறுபாடுகளெனவும் இருவகையாகப் பிரிக்கலாம். இந்த வகையில் உலகிலுள்ள பல சமூகங்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. உலக சமூகங்களுக்கிடையேயான பொதுவான வர்க்க, பாலியல் வேறுபாட்டை ‘’வர்ண சாதிய’’ அடிப்படையில் மாற்றிய நிகழ்வானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குள்தான் நிலைத்து நீடிக்கிறது.





பிறவியின் அடிப்படையில் தொழில் என்பது உலகில் எல்லா சமூகங்களுக்குள்ளும் நிலவியதொன்றுதான்.!! ஆனால் ‘’வர்ணச் சமூகமானது’’ தொழிலை பிறவி அடிப்படையில் ஒதுக்கியது மட்டுமல்லாது, அதெற்கென சடங்கு, சம்பிரதாயம் எனும் கோட்பாட்டு நியாயம் வழங்கியதோடு, திருமண உறவுகளையும் சாதிக்குள் முடக்கி அதில் எவ்வித மீறல்களும் நிகழ்ந்து விடாது கட்டிக் காப்பாற்றி வரும் சமூகமாகத் திகழ்வதும் இந்து மத ஆதிக்கம் நிலவும் சமூகங்ளில் மட்டுமே.

‘’ புருஷன் என்கிற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் படைக்கப்பட்டன எனப் பாப்பனர்கள் வேதம் படைத்தனர். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வர்ணங்களில் பார்ப்பனர் மேலானவர் சூத்திரர் கீழானவர் என வரிசைப்படுத்தி அவர்களுக்குரிய தொழிலையும் தொடக்ககால வேத (இருக்கு) மதம் முன்மொழிந்ததென்றாலும் இந்த நான்கு வர்ணங்களும் பிறவியோடு இறுக்கமாகத் தொடர்புப் படுத்தப்படவில்லை. கி. மு 185 க்கு பிறகு பௌத்த சமண மதங்களை வீழ்த்திப் பார்ப்பனர்கள் அரியணை ஏறிய பின்பு உருவாக்கப்பட்ட ’மனு நீதி‘ யில் தான் பிறவியோடு தொழில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் பார்ப்பன– சத்திரியரின் மேலாண்மை உறுதி செய்யப்பட்டது. வருணம் சாதியாக மாறிய கதை இதுதான்’’ என்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் இந்திய ‘மனு நீதி‘ யும் வர்ணம் சாதியாக மாறிய கதையின் வளர்ச்சியானது யாழ்ப்பாணத்தில் வேர் ஊன்றியதற்கான ஆதரங்களை ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ எனும் நூலில் காணலாம். யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம்குறித்து ‘யாழ்ப்பாண வைபவ மாலையில்‘ உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது. 

திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து
பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு
குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க
உருமருவு முதயகிரி யிரவுபோல
வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே

யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.


ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

விசய கூழங்கச் சக்கரவத்தி
குல சேகர சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன்
விரோதய சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன்
செயவீர சிங்கையாரியன்
குண பூசன சிங்கையாரியன்
குண வீர சிங்கையாரியன்
கனக சூரிய சிங்கையாரியன்

எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.

யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது,போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது. 

சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த ஊடுயுளுளு ஐளுளுயுஊ என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே. 

சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சுhதிகளாக பஞசமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது. 

சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.

இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம். 

இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் தலித்துகளுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பென்பது நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்பட வில்லை. 

1910 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் சாதியத் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டமானது பல இடையூறுகளுக்கு மத்தியிலும் நடைபெற்று வந்திருக்கிறது. எனவே நாம் இவ்வறிக்கை மூலமாக கடந்த காலங்களில் யாழ்ப்பாண மேலாதிக்க சாதியினரால் அன்றிலிருந்து தலித் மக்கள் பட்ட துயரங்களையும், அதற்கெதிராக அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் நினைவுறுத்துவதோடு. எதிர்காலத்தில் எமது ஒடுக்கப்பட்ட சமூகமானது யாழ்ப்பாண மேலாதிக்க சமூகத்துடன் சம அந்தஸ்துடன் இணைந்து வாழ்வதற்குரிய, எமக்கான தனித்துவமான அரசியல்; உத்தரவாதங்களை இவ்வறிக்கை மூலமாக சமர்ப்பிக்கின்றோம்.


பல நூறு ஆண்டுகளாக மனிதர்களாகவே மதிக்கப்படாத தலித்துக்கள் 1910 ஆம் ஆண்டிலிருந்தே வடபகுதி தொழிலாளர் சங்கம் மூலம் தமது உரிமைக்காக ஸ்தாபன ரீதியாக போராட முற்பட்டனர். இக்காலப் பகுதியில் ஆங்கிலேய மிசனெரியால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கல்லூரியில் ஜெகப் காந்தி என்னும் தலித் மாணவன் அக்கல்லூரியில் அனுமதி கேட்டபோது யாழ்ப்பாண உயர் சாதி மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரித்து போராட்டம் நடத்தினர். ஜேகப் காந்தியும்; சளைக்காமல் தனது கல்லூரி அனுமதிக்கான போராட்டத்தை நடத்தியதனாலும், அப்பாடசாலையில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பாதிரியாரின் மனிதாபிமான முன்னெடுப்புமே, ஜெகப் காந்தி அப்பாடசாலையில் யாழ்ப்பாண வரலாற்றில் முதல் தலித் மாணவனாக அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சாத்தியமானது.

சிறிய சிறிய போராட்டங்களை ஆரம்பித்து படிப்படியாக தலித் மக்களுக்கான விழிப்புணர்ச்சி வளர ஆரம்பித்தது. 1927 ஆம் ஆண்டு யோவே போல் என்பவரால் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்னும் ஸ்தாபனம் அமைக்கப்பட்டு, தலித் மக்கள் மத்தியில் சமூக விடுதலையின் அவசியத்தை உணர்த்துமுகமாக ‘ஜன தர்மபோதினி’ எனும் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. 1928 இல் சேர் பொன இராமநாதன் 79 கிராம சங்க பிரதிநிதிகளுடன் சாதி அமைப்பு முறைப் பாடசாலைகள் கொண்டுவர வேண்டும் எனக்கோரி வெள்ளைக்கார தேசாதிபதியிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தினார். 1929 இல் சாதி வெறியர்களை ஒன்று திரட்டி இந்து மகாசபையின் தலைமையில் கோப்பாய் அரசினர் பயிற்சிச் சாலையை உயர் சாதியினரின் தனி ஸ்தாபனமாக ஆக்குமாறும் தேசாதிபதியிடம் மனுக்கொடுத்தார் இராமநாதன். இவைகளையெல்லாம் எதிர்த்து நின்று யோவேபோல் போன்ற தலித் தலைவர்கள் அம்முயற்சிக்கு எதிராக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். 1930 களில் தலித்துக்களின் போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாத கோழைத்தனத்தால், தலித்துக்கள் கல்விகற்ற 13 பாடசாலைகள் உயர்சாதியினரால் எரிக்கப்பட்டது.

காலம் காலமாக இறந்த தலித்துக்களின் உடல்களை எரிப்பதற்கு உரிமையற்று இருந்த வேளை யாழ்ப்பாண வில்லூண்றி மயானத்தில் தலித் பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட வேண்டுமென தலித்துக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் அவ்வுடலை எரிக்க விடாது சாதிவேறியர்கள் தடுத்தனர். அந்நிகழ்வானது பெரும் கலவரமாக தோற்றம் பெற்று அதில் உயர்சாதியினர்pன் துப்பாக்கிச் சூட்டிற்கு முதலி சின்னத்தம்பி என்னும் தலித் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டு சாதிப்போராட்டக் கலவரத்தில் முதல் தியாகி ஆனார். இச்சம்பவத்தை லண்டன் மகாராணிக்கு தந்தி மூலமாக தெரிவித்து பின்பு மாகாதேசாதிபதியின் அனுமதியுடன் மேற்படி சடலம் எரிக்கப்பட்டது.

1940 ஆம் ஆண்டுக் காலங்களில் தலித் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு யாழ் குடா நாடெங்கும் பல வித ஸ்தாபனங்களை உருவாக்கி தமது போராட்டங்களை விரிவு படுத்தினர். இவைகளில் யாழ்ப்பாண நகரில் மையப் படுத்தப்பட்டு பல தலித் தலைவர்கள் சந்தித்து உறவுளை வலுப்படுத்தவும், போராட்டங்களை வலுப்படுத்தவும் பேர் உதவியாக செயல் பட்டது சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கமாகும்.

இலங்கையில் 1931 இல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தபோது தமிழ்த் தலைவர்களின் பிரரிநிதியாக விளங்கிய சேர் பொன் இராமநாதன் தலித்துகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த வரலாறும் நாம் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. 1942இல் சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கத்தினால் வட இலங்கையில் உள்ள சகல தலித்துக்களின் நலனையும், ஐக்கியத்தையும் கட்டிக்காக்க ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்;, 1943 இல் மிகப் பெரும் தலித் மாநாடு கூட்டப்பட்டு அம்மாநாட்டில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பு உருவாக் கப்பட்டு யோவே போல் தலைவராக நியமிக்கப்பட்டார். இம் மகாசபையானது கல்வி வாய்ப்பு, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தெரிவு, உத்தியோக வாய்ப்பு, சீவல் தொழிலாளர்களின் மேம்பாடு போன்றவைகளுடன் பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்திலும் தலித்மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் போராடிவந்தது. 

இம்மகாசபையின் 1944ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாவது மாநாட்டில் தலித்மக்களின் இன்னல்களையும் ஒடுக்கு முறைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக தலித்துகளுக்கான தனித் தொகுதியை ஒதுக்கியோ, அன்றி நியமனப் பிரதிநிதித்துவம் மூலமான பதவிகளும், யாழ் மாவட்ட மக்கள் விகிதாசாரத்தின்படி 25 வீதமான இடமும், தலித் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் இலங்கை அரசிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 1945இல் நடைபெற்ற மகாசபை மாநாட்டில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தனி ஆணைக்குழு நியமிக்கக் கோரியும் சகல ஸ்தாபன சபைகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டுமெனவும், கல்விப் பிரச்சனையில் முஸ்லிம் மக்களுக்கு அளித்த விசேச சலுகையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டுமெனக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1945இல் இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு இலங்கை வந்தபோது மகாசபை சார்பில் தலித் மக்கள் பிரச்சனை பேசப்பட வேண்டுமென தீர்மானித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் ஜீ ஜீ பொன்னம்பலத்தினால் முறியடிக்கப்பட இருந்தது. சாதிப் பிரச்சனைகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை எனவும், தமிழர்கள் அனைவரும் நாம் ஒற்றுமையாக வாழ்கிறோம் எனவும் சோல்பரி ஆணைக்குழுமுன் பேச முனைந்த ஜீ ஜீ பொன்னம்பலத்தின் நரித்தனத்திற்கு பணிந்து, தயங்கிவிடாமல் மகாசபையானது சோல்பரி ஆணைகுழு முன் உயர் சாதிக் கொடுமைகளை விபரித்தது மட்டுமல்லாது. அக்காலத்தில் கரவெட்டியிலுள்ள கன்பொல்லைக் கிராமத்தில் நிகழ்ந்த சாதிக்கலவர த்தின் அனர்த்தங்களையும் சோல்பரி ஆணைக்குழுவை அழைத்துவந்து நேரில் பார்வையிடவைத்தனர்

இதனால் ஆத்திரம் கொண்ட உயர் சாதி வெறியர்கள் சோல்பரி ஆணைக்குழு உறுப்பினர்களை கன்பொல்லைக்கு அழைத்துவரக் காரணமாயிருந்த மகாசபை பிரதிநிதிகளான எம் சி சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை, டி ஜேம்ஸ் ஆகியோரை வழி மறித்துத் தாக்கினர். இருப்பினும் அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். மகாசபை மூலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முயற்சிகள் யாவையும் ஜீ ஜீ பொன்னம்பலம் போன்ற உயர்சாதி நரியர்கள் தமது சதித்திட்டங்கள் மூலம் சிதைக்க முற்பட்டனர். சோல்பரி ஆணைக் குழுவும்பிற்பாடு தலிதமக்களின் அவல நிலைகளை கவனத்தில் கொள்ளாது, உயர் சாதியினாரால் உருவாக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திற்குள் தலித்துக்களை கட்டிப்போட்ட நிலைதொடரக் காரணமாகிப்போனது. (அதுவே இன்றும் தொடர்கிறது)



1948இல் சுதந்திரம் என்ற பெயரில் பிரித்தானிய அரசு இலங்கையில் இருந்த முதலாளித்துவத்தின் வாரிசுகளான சிங்கள உயர் வர்க்கத்தினரிடமும், யாழ் உயர் மேலாதிக்க சாதியினரிடமும் அரசியல்-சமூக– அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டுப்போக தொடர்ந்தும் தலித்துக்கள் தங்கள் போராட்டத்தினை இடது சாரி சிந்தனையாளர்களின் கருத்தியலின் நம்பிக்கையில் தமது போராட்டத்தை புதிய நோக்கில் முன்னெடுத்துச் சென்றனர். 1955இல் காணி அமைச்சினால் நிறைவேற்றப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் தலித்துகளுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை மகாசபை உறுப்பினர்கள் காணி அமைச்சரிடம் நேரில் சென்று கையளித்தனர். 1956இல் மகாசபையின் தொடர்ச்சியான போராட்டத்தின் பலனாய் நல்லூர் கந்தசாமி கோவில் நுழைவு அனுமதி தலித் மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தொடர்ந்தும் தங்களது தீண்டாமை கொடுமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததை யாழ்ப்பாண உயர்சாதி வெறி உணர்வு கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியாகட்டும், எஸ் ஜே வி செல்வநாயத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சியாகட்டும் தலித் போராட்ட வளர்ச்சியை சகிக்கமுடியாமல் மகாசபையை பிரிக்கும் சதி முயற்சியிலும் ஈடுபட்டனர். 1957இல் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட எம் பி டி சொய்சா அவர்களுக்கு தமிழரசுக் கட்சியானது கறுப்புக் கொடிகாட்டியும், பறை மேளம் அடித்தும் தமது எதிர்ப்பினைக் காட்டினர். இச்சம்பவமானது மகாசபைக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மகாசபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தமிழரசுக் கட்சியின் சதி வலையில் சிக்கி தலித்போராட்டத்தை நிலை குலையச்செய்தனர். இருப்பினும் மகாசபையின் நீண்டகால கோரிக்கையான சமூக-குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் (தீண்டாமை) பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டதுடன் மீண்டும் 1971 இல் இச் சட்டமானது திருத்தமாக்கப்பட்டு அதற்கான தண்டனைகளான அபராதங்களும், சிறைக்காலங்களும் அதிகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் 1956 தொடக்கம் 1960 வரையிலான மகாசபையின் போராட்டத்தினால் சண்டிலிப்பாய், கரவெட்டி, மட்டுவில், கட்டுவன்புலம், புலோலி, மந்துவில் ஆகிய பகுதிகளில் 19 பாடசாலைகள் தலித்துகளுக்காகவே உருவாக்கப்பட்டன. சிறுபான்மைத்+ தமிழர் மகாசபையின் மூலமாக தீண்டாமைக்கு எதிராகவும் தலித்துக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும் பல போராட்டங்களை நடத்திய போதும் அரச துறைகளில் யாழ் சைவ வேளாள சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்து வந்தமையால், நடைமுறையில் தலித்மக்களின் தேவைகள் அதிகம் நிறைவேறமுடியாது போயின இதன் விளைவால் 1967இல் தலித்துக்கள் பௌத்த மதம் மாறுவது என முடிவெடுக்கப்பட்டு பல கிராமங்களில் இருந்து தோழர் யோகரடணம் உட்பட (புகலிடத்தில் வாழும் தீண்டாமை ஒழிப்புக் களப் போராட்டங்களின் சாட்சிகளில் ஒருவர்) அனைத்து இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவராக இருந்த வைரமுத்து தலைமையில் நூறு தலித் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தென் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கன்பொல்லை, கரவெட்டி, புத்தூர், பூநகரி ஆகிய கிராமங்களிலும் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. 

1965இல் அருந்ததியர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், திருவள்ளுவர் மகாசபை போன்ற பல சங்கங்களினால் சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பொதுஅமைப்பு உருவாக்கப்பட்டு 1966இல் அச்சுவேலியில் ஒரு மாநாட்டையும் நடாத்தியது. அம்மாநாட்டின் இறுதி முடிவாக தலித்மக்கள் யாழ் உயர் சாதிமக்களுக்குள் இரண்டாம்தர மக்களாக கருதும் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் போது அம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கரஸ் கட்சி பிரதிநிதிகள் அத்தீர்மானத்தின் பிரகாரம் தலித் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமக்கு மூன்றுமாதம் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டனர். பின்பு அது அவர்களின் இயல்பான சமூக-அரசியல் ஏமாற்று நடவடிக்கைதான் என்பதை காலம் எமக்கு உணர்த்தியது.

சர்வதேச ரீதியில் ஏற்பட்ட இடதுசாரிக் கோட்பாட்டு முரண்பாடுகளின் நிமித்தம் சீனக் கம்யூனிஸ்ட், ரஸ்ய கம்யூனிஸ்ட் எனும் பிளவு நிகழ்ந்த நிலையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அப்பாதிப்பு நிகழ்ந்தது. அதன் காரணமாய் சீனச் சார்பினர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை விட்டு விலகினர். இதில் அங்கம் வகித்தவர்களாலேயே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக கே டானியல் பணியாற்றினார். இதன் முதலாவது மாநாடு 21-10 –1967 இல் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் அமைந்த சின்னர் கார்த்திகேசு அரங்கில் நடைபெற்றது.சங்கானை தேனீர்க்கடை பிரவேசத்தின் போது ஏற்ப்பட்ட கலவரத்தினால் கொல்லப்பட்ட கார்த்திகேசுவே அவராகும்.

1967இல் பொன்னாலைக் கிராமத்திலுள்ள தலித்மக்கள் குடிநீர் பெறுவதற்கு மறுக்கப்பட்டதன் காரணமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சாதி வெறியர்கள் மட்டுமன்றி, அதிகாரிகள் தமிழ் தலைவர்கள் யாவரும் ஒன்றிணைந்து அப்போராட்டத்தை நசுக்க முற்பட்டனர்.இறுதியில் சிறீலங்கா அரசின் தலையீட்டால் குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்ததன் ஊடாக அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.


1967இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும் பரவியது.

1967 இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும் பரவியது. அதன் விளைவால் நிச்சாமம் எனும் கிராமத்தில் வன்னியன் குமரேசு அவர்கள் சாதி வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். இவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலும் பல தலித்துகக்கள் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளான போதும் தொடர்ந்தும் ஊர்வலமாகச் சென்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சங்கானைப் போராட்டத்தின் போது பல்வேறு துன்பங்களை தலித் மக்கள் அனுபவித்த நிலையில், அவர்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்துதவியவர்களில் கம்பஹா எம் பி யாயிருந்த எஸ் டி பண்டாரநாயக்கா அவர்களும். தாழ்த்தப்பட்ட தலித் தமிழர்கள் சம்பந்தமான போராட்ட வழக்குகளில் ஆஜராவதற்கு யாழ்ப்பாணத் தமிழ் மேட்டுக்குடிச் சட்டத்தரணிகள் எவருமே(அப்புக்காத்துகள்) உதவ முன்வராத நிலையில் பிரயாணச் செலவை மட்டும் ஏற்று எமது தலித் மக்களுக்காகக யாழ்பாணம் வந்து வழக்குகளை நடத்தியவர்கள் வண்டி சொய்சா, எச் எம் கரவித்;த போன்ற சிங்களச் சட்டத்தரணிகளும் என்பதை இவ்வறிக்கையினூடாக நாம் பெருமையுடன் அழுத்திக் கூறுகின்றோம்.

சாவகச்சேரியில் சாதிவெறியர்கள் தலித்துக்கள் மீது தொடர்ந்தும் தமது தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். இதில் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியினர் திரைமறைவில் இயங்கி வந்தனர் என்றும் தெரியவர&