,d;iwa  mjpcr;r jkpo;r; r%ff; nfhjpepiyahfj; Jyq;FtJ jkpo;j; NjrpaKk; mjd; mbikr; NrtfKNk...J}!!!

முகப்பு                                    21/07/2008

   

நாவினால் சுட்ட வடு 

ஆறும்.

தீயினால் சுட்ட வடு 

ஆறும்.
                       

நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும் 

ஆறும்

உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல் 

ஆறாது 

சந்ததியினால்... 
சாதியினால் ... சுட்ட 

' வடு'
         

 

jypj; mwpf;if
jPHkhdq;fs;
khehl;Lf; fl;Liufs;
NeHfhzy;
fpof;fpd; RaepHzak;

 

 

 

Declaration

Resolution

                   

 

21/07/2008

 ''வழுக்கி, வழுக்கி நழுவும் மனிதம்''

தனது துயரத்தை இறக்கும் கரைகள் தென்படாதபோதும், 

25 வருடங்களாக சுமந்து வரும் துயரத்தை ஏந்திய  வண்ணம் ‘காலத்தை’ திரும்பிப் பார்த்து மனதுக்குள் கரைகின்றது ‘யூலை 83....’ 

 

15/07/2008

27ஆவது பெண்கள் சந்திப்பு கனடாவில்.

விபரங்கள்

 

13/07/2008

நல்ல ‘சினிமா’தான்...!!! ‘தசாவதாரம்’

ஒரு சினிமாவை விமர்சிப்பதாயின் அது சார்ந்த தொழில்முறை நுட்பங்கள், காட்சி அமைப்புகள், நடிப்பு, கதை, திரைக்கதை போன்ற பல்வேறு துறைகள் குறித்தும் பேசவேண்டும்! அவ்வாறு பேசுவதனூடகவேதான் சினிமா விமர்சனம் முழுமைபெறும் என முழங்குபவர்களும் உளர்! ....

 

23/06/2008

 

தோழர் டானியிலின் தணிக்கை செய்யப்பட்ட கட்டுரையும் இன்று எழும் கேள்விகளும்  

 

 

இங்கு பிரசுரமாகும் தோழர் டானியலின் கட்டுரை 1979 ல் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை எதிர்ப்பு வெகுஜன இயக்க மலருக்கென எழுதப்பட்டு அப்போதிருந்த தணிக்கைச் சட்டத்தின் காரணமாக பிரசுரம் தடைசெய்யப் பட்டதால் குறிப்பிட்ட மலரில் பிரசுரமாகவில்லை. இக்கட்டுரையின் ஒரு பிரதி 1982இல் நான் டோக்கியோவில் வாழ்ந்து வந்தபோது யாழில் இருந்துவந்த ஒரு நண்பருக்கூடாக எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து கடந்த 25வருடங்களாக இந்தக் கட்டுரைப் பிரதியும் என்னுடன் பல இட மாற்றங்களை அனுபவித்துள்ளது. எனக்கு ஒரு பிரதியைக் கிடைக்கச் செய்ததுபோல வேறு யாருக்கும் டானியல் இக் கட்டுரையின் பிரதிகளை அனுப்பியிருப்பார். ஆகவே இந்தக் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கலாம். அப்படியிருப்பினும் இதனை மீண்டும் பிரசுரிப்பதில் பயனுண்டு என நம்புகிறேன். 

....!!!  

 

 

22/06/2008

கறுப்பாகிக் கிடந்த ஈழமண்ணில் புதிதாய் எழுந்து வீழ்ந்த விதை

 

சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகு சன இயக்கம், இலங்கை கம்யூனிசக் கட்சி போன்ற அமைப்புகளில் முன்னணி உறுப்பினராக இருந்து செயற்பட்ட மறைந்த தோழர் செல்லையா அவர்களின் நினைவுக் குறிப்பு

 18/06/2008

நடைபெற்ற 35 ஆவது இலக்கியச் சந்திப்பின் சுருக்கம்

 

35வது                          இலக்கியச்சந்திப்பு

ஸ்ருட்காட்   , ஜேர்மனி .ஜூன் 14-15, 2008.

நிகழ்ச்சிகள்....

17/05/2008

தலித் சமூகங்கள் மீது அக்கறைகொண்டோரின் கவனத்திற்கு

 

தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு  களங்கம், தமிழ்த் தேசிய இன விடுதலையை நாசமாக்குது, என்.ஜி.ஓவின் ஒட்டுப்படை என்றெல்லாம் இன்று தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய எம்மைக் குறித்துப் பேசப்படுகிறது.  இவ்வாறான அவதூறுகளும், விசமப் பிரச்சாரங்களும் ஒரு சில சாதிய மேலாதிக்கக் குணமுடையோரின் செயல்பாடுகள் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.  நாம் வெளிப்படையாகவே பகிரங்கமாக இரண்டு மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம். அதில் நமது நோக்கம், நமது செயல்பாடுகள், நமது ஆதரவு சக்திகள் பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். எமது பிரச்சனைகளையும், எமது செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் அமைப்புகளுடனான எமது தொடர்புகள் அவசியமானது. சாதிய மேலாதிக்கமானது இன்று எம்மை என்.ஜி.ஓவுடன் முடிச்சுப் போடுகிறது. இந்த சாதிய மேலாதிக்க வாதிகளே தம்மை சமூகநல விரும்பிகளாகவும், தேச பக்தர்களாகவும் கூறிக் கொண்டு எம்மை முளையிலேயே கிள்ளிவிடத் துடிக்கிறார்கள். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய  நாம் யாருக்கும் விலைபோகும் அணியல்ல.

 

 

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

 

 

 

05/05/2008

 

'யாழ்ப்பாணியம்'

நல்ல முகமூடி ஈழத்தமிழ்த் தேசியம்.  

  யாழ்ப்பாணத்தில் தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்கிறது. 

இதை கனடாவில் ஒருபாலுறவுசார்ந்த கருத்தியலைப் பற்றிப் பேச வந்த ஓர்க்வில் நிருபாமா என்ற பெயரில் ஒழிந்திருக்கும் ஒருயாழ்ப்பாணி-  இதை எழுதினார்.

இப்படி ஒருவர் கனடாவில் எழுதுவதில்லை அப்படி ஒருவரும் கனடாவில் இல்லை என்றே அனைவரும் சொல்கிறார்கள் இதுபற்றி அதே இணையத்திற்கு நான் மறுத்து எழுதிய மூன்று நிமிடத்தில் அந்தக் கட்டுரையிலிருந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆக என்னால் இந்த மோசமான கருத்தியலுக்கு அந்த இணையத்தின் ஆசிரியரையே குற்றஞ்சாட்ட முடியும். நான் அவரிடம் கேட்டு எழுதியது தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்பதில் வருகின்ற நாங்கள் என்பதற்குள் மறைந்திருக்கும் சாதி எது? என்பதுவே. கவனமாகக் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் - நாங்கள் என்ற சொல்லாடலுக்குள் இருக்கின்ற மிக முக்கியமான தளம் பற்றி கருத்துக்கெடுக்காதவர்கள் இவர்கள். அந்தக் கருத்தாக்கம் தருகின்ற வன்முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பாதவர்கள் இவர்கள்;. இவர்கள் எல்லோரும்தான் தம்மை ஈழத்தேசியவாதி களாக அடையாளப்படுத்துகிறார்கள். இந்த ஈழத்தேசியவாதிகள் மீது நாம் எவ்வகையான அவதானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.             

           (   மற்றது சஞ்சிகையிலிருந்து)

 

          பக்கம் 1

                                             

                                                                                     
  
                                                                                              இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினால்
                                                                                       பிரசுரமாகும் மாதாந்த பத்திரிகை    [தொடர்புகளுக்கு]