21/17/2008
''வழுக்கி,
வழுக்கி
நழுவும்
மனிதம்''

‘’நான்
காலத்தின்
குழந்தை.
நான் கி.முன்பாகவும்
பிறந்தேன்,
கி.பின்பாகவும்
பிறந்தேன்.
காலத்திற்கு
என்னுடன்
கூடிய 12
குழந்தைகள்.
மாங்காய்த்
தீவின்
பல்வேறினங்களுக்கும்
நான் பொதுவான
குழந்தையாகவே
இருந்தேன்.
அவர்களால்
அன்புடன்
அரவணைக்கப்பட்டடேன்,
சாமுத்திரிகா
இலட்சணம்
கொண்ட
குழந்தை
எனவும்
போற்றப்பட்டேன்.
ஆனால் அந்தப்
பேறும்,
பாக்கியமும்
மாங்காய்த்தீவின்
‘உன்னத
சமூகத்திடமிருந்து’
தொடர
முடியாது
அறுபட்டுப்போனது.‘’
என மனம்
வெதும்பியது
யூலை 83.
தனது
துயரத்தை
இறக்கும்
கரைகள்
தென்படாதபோதும்,
25 வருடங்களாக
சுமந்து
வரும்
துயரத்தை
ஏந்திய
வண்ணம் ‘காலத்தை’
திரும்பிப்
பார்த்து
மனதுக்குள்
கரைகின்றது ‘யூலை
83....’
‘’நாங்களெல்லாம்
வெறும்
புளுக்கள்
நம்மையே
அறியாத
பிண்டங்கள்
நம்மையெல்லாம்
ஆட்டுவிக்கும்
தமிழீழ
மகாதர்மம்
அளப்பெரியது.
நமது எளிய
தர்ம
நியாயங்களைவைத்து
அளவிடமுடியாது.‘’
என்றுரைத்த
மாங்காய்த்தீவின்
‘உன்னத’
சமூகம்
அன்றொருநாள்
தமது ‘இலட்சியப்
புள்ளியை’
எட்டுவதற்காகவென
திருநெல்வேலியில்
13 ‘பேரின’
சமூகத்தினரை
பலி எடுத்தது.
இதுவே எமது
தமிழீழ
கனவுச்
சாளரம்
எனவும்
குதூகலித்தது
அந்த ‘உன்னத
சமூகம்’
திருநெல்வேலியில்
இட்ட தீ
வெலிகடைவரை
பரவியது.
அங்கு ‘பேரின’
சமூகத்தினரால்
53 ‘உன்னத
சமூகப்
பிரஜைகள’
கொல்லப்பட்டார்கள்.
வெலிகடையில்
நிகழ்த்தப்பட்ட
வேள்விக்கு
நானும்
உடைந்தையானேன்.
இந்தப்
பழியிலிருந்தும்
பாவத்திலிருந்தும்
மீண்டு
என்னைப்
புனிதப்படுத்தும்
வழிகளை
நாள்தோறும்;
தேடியலைந்தேன்.
இரண்டு
வருடங்களில்
வழி
காட்டப்பட்டது.
நானும் எனது
பாவங்கள்
கழுவப்படும்
எனத் திமிர்
பிடித்தேன்.
ஆம் அநுராதபுரத்துக்
கிராமங்களில்
சன்னதமாடிய ‘உன்னத
சமூகத்தின்
தலைமையானது’
குழந்தைகள்
உட்பட ‘பேரின’
சமூகத்தின் 138
அங்கத்தவர்களை
வெட்டியும்
கொத்தியும்
பழி
தீர்த்துக்
கொண்டது.
இதற்கு மே 85 ம்
உடந்தையாயிருந்தது.
53க்கு 138 மிக
அதிகமானதென
எனது
புத்திக்கு
எட்டியபோதும்
இதனால் எனது
கறை
கழுவப்படும்
தானே என எனது
சுயநலம்
முன்னரங்கில்
நிலைகொண்டது.
ஆயினும்
உன்னத
சமூகத்தினருக்கு
என்மீதான
கோபம்
அடங்கவில்லை.
1986 லும்என்னைக்
கறுப்பு யூலை
83 எனவே
திட்டவும்
செய்தார்கள்.
உன்னத சமூகம்
எட்டுத்திக்காகவும்
வீங்கிப்
பெருத்தது.
அதற்குள்
போட்டிகளும்
பொறாமைகளும்
தலைவிரித்தாடியது.
பிளவுகள்
தோன்றியது.
உங்கள் ‘’அனைவருக்கும்
நானே ஒளியும்
வழியும்.‘’
எனக்கூறியது
ஒரு ‘பெரிய’
பிளவு. ‘’மாபெரும்
தமிழ்த்
தேசிய நீதி
ஒன்றிற்காக
இழைக்கப்படும்
சிறு சிறு
அநீதிகள்தான்
இக்
கொலைகளெல்லாம்.
உண்மையில்
அவைகளெல்லாம்
நீதியின் ஓர்
அம்சம் தான்.‘’
என்று
போதித்தது
அந்தப் ‘பெரிய’
பிளவு. தனது
சொந்த
சமூகத்தின்
பல நூறு
அங்கத்தவர்களை
கள்ளியங்காட்டுச்
சந்தியில்
உயிருடன்
போட்டும்
கொழுத்தியது.
அதற்கும்
காலத்தின்
குழந்தைகளில்
ஒன்றான மே 86ம்
உடந்தையாகவே
இருந்தது.
அனால் 87 லும்
உன்னத சமூகம்
ஒன்று கூடி 83
ன் கரிநாள்,
கறுப்பு யூலை
என என்னைத்
திட்டுவதையும.
வெறுப்பதையும்,
என்மீது காறி
உமிழ்வதையும்
நிறுத்தவில்லை.
83 யூலை
வெலிகடைக்
கொலைகளின்
கொடூரங்களையும்
மிஞ்சிய,
நெஞ்சை
உலுக்கிய
செய்தியாக
கிடைத்தது.
‘கந்தன்கருணையின்’
63
கொலைகளாகும்
இதற்கு
உடந்தையாக 1986
இருந்தது.
03 ஓகெஸ்ட் 90
காத்தான்குடியுலுள்ள
இரண்டு
பள்ளிவாசலுக்குள்
நடந்த 146
கொலைகளுக்கு
உடந்தை.
14 ஓகெஸ்ட் 90
ஏறாவூர்
கிராமங்களில்
வேட்டையாடப்பட்ட
173
கொலைகளுக்கு
உடந்தை.
இந்தியன் ஆமி
வெளியேறிதும்
மட்டக்களப்பு
வாவிகளில் பல
நூறு உடல்கள்
மிதந்தது.
மாத்தையா
திமிர
வெளிக்கிட்டதால்
அவருடன்
சேர்த்து 600
இற்கும்
அதிகமான
உடல்கள்
படைக்கப்பட்டது.
கருணா
சுழிச்சோடியதன்
விளைவாக
வெருகல்
ஆற்றில் பல
நூறு
உயிர்கள்.
சந்தரத்தில்
சுவைகண்டு
சுடச் சுடக்
கேட்டதற்கு
மகேஸ்வரி காண
படையல்
இட்டபடியே
இருக்கின்றீர்கள்.
மேற்படியான
விளைவுகளின்
காலங்கள்
யாவுமே
கறுப்பு
நாட்களாகவோ,
துக்க
நாட்களாகவோ
அனுஸ்டிக்கப்படுவதில்லை.
தியாகிகள்
தினம்.
வீரமக்கள்
தினம்,
மாவீரர்
தினம்
என்றல்லவா
புகழ்பாடி
கௌரவிக்கின்றீர்கள்.
என்னை
மட்டும்
வெறும் 53
கொலைகளுக்கு
உடந்தையாக
இருந்ததற்காக
கறுப்பு யூலை
83 என்று
ஒண்டில
இருந்து 25 காண
காவிக்கொண்டு
அலைகின்றீர்கள்.
எத்தனை
எண்ணிக்கையில்
கொலைகள்
விழும்
பட்சத்தில்
என்மீதான கறை
கழுவப்படுமோ!!!
இந்த உங்கள்
சூத்திரம்
மிக
விசித்திரமாகவும்...!!உங்கள்அறம் சர்ந்த
தர்க்கம் குதர்க்கமாகவும்
அல்லவா
இருக்கிறது!!
யூலை 83 ஆகிய
என்மீதான
உங்கள்
வெறுப்பும்
கோபமுமானது
மனித
உயிர்கள்
மீது நீங்கள்
காட்டும்
அக்கறை இல்லை
என்பதை
விளக்கித்தான்
சொல்ல
வேண்டும்
என்பதற்கில்லை.
53 எங்கே
ஆயிரக்கணக்கான
எண்ணிக்கைகள்
எங்கே?
நீங்கள்
என்னை
இறக்கிவிட
முடியாது
தூற்றியபடி 25
வருடங்களாக
காவுவது
அரசியல்
சார்ந்ததென்பதுதானே
உண்மை. இந்த
அரசியல்
பயணத்தில்
நிங்கள்
கைகோர்ப்பது
யாருடன்
என்பது
எனக்குத்திரியாதா
என்ன!
உங்கள்
உன்னத சமூகத்
தலைமையின்
உன்னத
ஆட்சியை
சிலவருடங்களாக
நானும்
பார்த்தேனே...!.
‘நந்தவனத்திற்கு’
சென்று
ஆண்டியாய்
வந்து
புலம்பிநீங்கள்.
மாற்றுக்
கருத்திற்கு
வழி
யில்லையே என உழன்றீர்கள்.
பள்ளிக்குச்
சென்ற
பிள்ளையைக்
காணவில்லையே
என்று
யுனிசெவ் இன்
கதவைத்
தட்டிநீங்கள்.
நாசமறுப்பாரால
ஏ நைன்
தொல்லை பெரிய
கொள்ளை
என்றீர்கள்.
உசிரையெல்லாம்
வெறும்
மசிராய்
புடுங்கிறாங்களென்று
மனித உரிமைச்
சங்கத்திடம்
சென்று
ஒப்பாரி
வைத்தீர்கள்....
அனால்
இப்பவும்
நான் தான்
உங்களுக்கு
கறுப்பு ‘யூலை
83’
எங்களது
முதலும்
மூத்த
எதிரியும் ‘பேரின’
சமூகமே,
பேரின சமூகம்
சிந்தும் ஒரு
துளி
தவறாயினும் ‘உன்னத
சமூகமான’
நாம்
ஓரணியிலோ
அல்லது ஒரு
குடையின்
கீழோ
குந்தியிருந்து
கண்டனங்களை
அள்ளி
வீசுவோம் என ‘பிளவுண்ட’
உங்கள் ‘உன்னத
சமூகத்தின’
உயர்
தலைமைக்கு
மனம் பிளந்து
வழிவிட்டு
வருகிறீர்கள்
என்பதுதானே
உண்மை.
என் மீது பழி
சுமத்தும்
உன்னத
சமூகத்தின்
தலைமை இடும்
புள்ளியில்
நீங்களெல்லாம்
சென்று
மொய்ப்பதை
பாருங்கள்.
‘’எனது
அன்புக்கும்
பாசத்திற்குமுரிய
தமிழீழ
மக்களே எமது
விடுதலையானது
ஆயுத
வலிமையாலோ,
போராளிகள்
வலிமையாலோ,
குல
வலிமையாலோ
நிலை
நிற்கவில்லை.
எனது சொல்
வலிமையால்
தான் இதுவரை
காலமும்
நிலை
நிற்கிறது.
எனது சொல்
வலிமையே
எம்மைக்
காத்தருள்கிறது.
சொல்லில்
பிழை
ஏற்படுவதென்பது
எமது
இலட்சியத்தையே
சிதைப்பதாகும்.
எனவே தான்
வருடா வருடம்
நான் ஒரு
எழுத்தைக்
கூட பார்த்து
அவதானித்து,
உச்சரித்து
உங்கள்
முன்னால்
உருட்டி
விடுகின்றேன்.
எமது முதலும்
மூத்த
எதிரியுமான
சிங்கள பேரின
வாதம் எமது
போராளிகளின்
கண்களைத்
தோண்டிக்
கொலை செய்த
நாட்களை நாம்
மறந்து
விடமுடியாது.
ஆம் 83 கறுப்பு
யூலைப்
படுகொலைகளின்
காயங்கள் 25
வருடங்கள்
ஆகியும்
ஆறவில்லை. ‘உன்னத
சமூகமான’
நாம்
ஓரணியில்
ஒன்றுபட்டு
அந்தக் கரிய
நாட்களை
கண்டிப்போம்.
இறுதியாக
ஒன்றை
நினைவுறுத்த
விருமபுகிறேன்.
அடிக்கிற கை
தான்
அணைக்கும்
என்பது எமது
பாரம்பரியமான
பொன் மொழி.
அதுபோல் ‘போடுகிற’
கை தான்
உங்களை
அணைக்கும்
என்பதையும்
மறந்து
விடாதீர்கள்.
83 யூலை
படுகொலைகளைக்
கண்டிக்கும்
ஐரோப்பிய
புகலிட ‘உன்னத
சமூகப்
பிரஜைகள்’
அனைவரையும்
நான்
பாராட்டுகின்றேன்.‘’
எனக்கு
ஓர் அற்ப ஆசை
கி. பின்நவீனகாலத்திலாவது
நான் 14 யூலை ஆக
பிரான்சில்
பிறப்பதற்கு.
‘உன்னத
சமூகத்திடமிருந்து’
வழுக்கி,
வழுக்கி
நழுவும்
மனிதம்
பனிதூவும்
வீதிகளில்
உறைந்து
கிடக்க.
அதைத் தாவிக்
கடந்தபடி
யூலை 83 ஆனது 26
வருடத்தையும்
எதிர்கொள்ளக்
காத்திருக்கிறது.
மொழிபெயர்ப்பு-
‘அசுரா’
