ஜேர்மனியிலுள்ள
ஸருட்காட்
நகரில்
இலங்கையர்
ஜனநாயக
அரங்கு
சார்பில் 2006-11-11இ12
ஆம்
திகதிகளில்
இடம் பெற்ற
அரசியல்
மாநாட்டில்
எம்.ஆர்.ஸ்ராலின்
அவர்களால் “கிழக்கின்
சுயநிர்ணயம்”
எனும்
தலைப்பில்
ஆற்றபட்ட உரை.

அன்பார்ந்த
நண்பர்களே
தோழர்களே!
இந்த
அரங்கில்
உரையாடுவதற்காக
‘கிழக்கின்
சுயநிர்ணயம்’
எனும்
தலைப்பு
நிர்ணயிக்கப்பட்டமையானது
சிலருக்கு
ஆச்சரியத்தை
ஏற்படுத்தியிருக்கலாம்.
சிலவேளைகளில்
கிழக்கு
மாகாணம்
எதிர்கொள்ளும்
தனித்துவமான
பிரச்சனைப்பாடுகளை
ஒட்டிய
உரையாடல்கள்
‘பிரதேசவாத
நோக்கிலிருந்து
எழுபவை
என்கின்ற ஒரு
தவறான
புரிதலும்
உங்களில்
சிலரை
ஆட்கொண்டிருக்கலாம்.
எனினும்
இங்கு
கூடியிருப்போரில்
பெரும்பாலானோர்
மாற்று
கருத்துகளின்
இருப்புக்காக
உயிரையே
கொடுத்து
போராடும்
பாரம்பரியத்தில்
வருபவர்கள்
என நான்
நம்புகிறேன்.
எனவே
பலமுனைகளிலும்
ஒடுக்கப்பட்டு
ஏமாற்றப்பட்டுஇ
அலைக்கழிக்கப்பட்டுஇ
சிதறடிக்கப்பட்டுள்ள
மாகாணமொன்றின்
குரலாக
ஒலிக்கப்போகும்
எனது உரையை
பொறுமையுடன்
புரிந்து
கொள்ள
முயலுமாறு
தயவாக
கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ்
பேசும்
மக்கள் எனும்
வகையில் நாம்
அனைவரும்
இணைந்து
அல்லது
நம்மில்
பெரும்
பாலானோர்
இணைந்து நமது
மக்களுக்கான
விடுதலையைவேண்டி
தமிழீழம்
எனும்
கோரிக்கையை
முன்வைத்து
இதுவரை
போராடி
வந்துள்ளோம்
இக்கோரிக்கைக்கு
வித்திட்டவர்கள்இ
அதை
ஜனநாயகவழியில்
முன்வைத்தவர்கள்இ
அதற்காக
ஆயுதம் ஏந்தி
போராடியவர்கள்
என
பலதரப்பட்டோரும்
இங்கு
கூடியுள்ளோம்
இந்தவேளையில்
விரும்பியோ
விரும்பாமலோ
அந்த
தமிழீழம்
நம்கண்முன்னாலேயே
பலவீனப்பட்டு
நிற்பதை நாம்
ஏற்று கொண்டே
ஆகவேண்டும்.
இந்த
நிலையில்தான்
தமிழீழம்
எனும்
கோட்பாட்டின்
அடிப்படையான
வடக்கு
கிழக்கு
இணைந்த
தாயகம்
என்கின்ற
நிலையிலிருந்து
விலகி
கிழக்குமாகாணம்
தனது
சுயநிர்ணயம்
பற்றி
பேசவேண்டிய
சூழல்
உருவாகியுள்ளது.
இந்த நிலையை
நாம்
ஆதரிப்பதா
அல்லது
எதிர்ப்பதா
என்பதற்கு
முன்னால்
அந்த மாகாணம்
எதிர்கொள்ளுகின்ற
ஒடுக்குமுறைகள்
என்ன? அதனது
தனித்துவம்
என்ன?
பாரம்பரியம்
என்ன? வரலாறு
என்ன? என்பன
குறித்து
எமது
பார்வைகளை
திருப்புதல்
அவசியம் என
கருதுகின்றேன்.
வரலாற்று
காலத்திற்கு
முற்பட்ட
புராண
இதிகாசங்களில்
இராமாயணம்
எனும்
இதிகாசம்
முக்கியமானதொன்றாகும்.
இந்த இராமாயண
காலத்தில்
இலங்கையின்
வேந்தனாக
இராவணன்
விபரிக்கப்படுகின்றமை
நாமறிந்ததொன்றே.
இந்த இராவணன்
ஆட்சியின்
இருபெரும்
தடயங்களான
திருகோணமலையையும்இ
உகந்த
மலையையும்
தன்னகத்தே
கொண்டதுதான்
கிழக்கு
மாகாணம்
ஆகும்.
வரலாற்று
ரீதியாக
இலங்கையின்
மிக புராதன
வரலாற்று
தடயங்களை
கொண்ட
இராசதானியாக
கருதப்படுவது
‘தீகவாவி’
ஆகும்.
புதைபொருள்
ஆராய்சிகளின்
அவசியங்களுக்கு
அப்பால்
நேரடியாகவே
இப்பழைய
இராசதானியின்
இடிபாடுகளை
இத்
தீகவாவியில்
இன்றும்
காணலாம். இந்த
தீகவாவியிலிருந்துதான்
கிழக்கு
மாகாணத்தில்
காணப்பட்ட
அரசோற்றும்
மையங்களின்
உருவாக்கம்
தொடங்குவதை
நாம்
அவதானிக்கலாம்.
அப்பாறை
மாவட்டத்தினுள்ள
அக்கரைபற்றுக்கு
மேற்கே
சுமார் 22 கி.மீ.
தூரத்தில்
இந்த தீகவாவி
காணப்படுகின்றது.
இதுபற்றிய
சரித்திர
சான்றுகளில்
புத்தர்
இங்கே விஜயம்
செய்தமை
முக்கியமானதொன்று(1).
மகாவம்சத்தில்
காணப்படுகின்ற
இக்குறிப்புகள்
சுமார் 2500
வருடகால
வரலாற்று
தொடர்ச்சிகொண்ட
அரசியல்
பாரம்பரியம்
கிழக்குமாகாணத்திற்கு
உண்டு என்பதை
எழுத்துரு
வடிவில்
எமக்கு
சொல்லிநிற்கின்றது.
கி.மு. 145 ல்
இலங்கை மீது
படையெடுத்து
வந்த
எல்லாளன்
திருகோணமலையில்
தரையிறங்கியமையும்(2)இ
சுமார் 44
ஆண்டுகள்
இலங்கை
முழுவதிலும்
கோலோச்சிய
அவனை
தோற்கடித்த
துட்டகைமுணுவின்
படைகள்
தீகவாவியிலிருந்தே
புறப்பட்டமையும்
கிறிஸ்துவிற்கு
முற்பட்ட
காலத்திலிருந்தே
கிழக்கு
மாகாணத்தில்
ஒவ்வொரு
பிரதேசங்களும்
அரசியலில்
கொண்டிருந்தகேந்திர
முக்கியத்துவத்தினை
எடுத்தியம்புகின்றன.
மாகமம் எனும்
இடத்திலிருந்து
புறப்பட்ட
துட்டகைமுணுவின்
படைகளில்
மட்டக்களப்பு
தமிழர்களே(3)
நிறைந்திருந்தார்கள்
என்கின்ற
உண்மை
கிழக்கிலங்கையில்
இனஇ மதஇ
வேறுபாடுகள்
அற்ற ஒரு
வாழ்வியல்
முறை
நீண்டகாலமாகவே
பலம்பெற்று
இருந்துவந்துள்ளதை
புலப்படுத்துகின்றது.
ஆனால் இந்த
உண்மைகள்
எமது
வரலாறுகளில்
இருந்து
மறைக்கப்பட்டிருக்கின்றது.
சிங்கள
வரலாற்று
ஆய்வாளர்கள்
துட்டகைமுணுவை
சிங்கள
குறியீடாக
திரிபுபடுத்தினர்.
பதிலுக்கு
தமிழ்
வரலாற்றாய்வாளர்களும்
எங்கிருந்தோ
வந்த
அன்னியனான
எல்லாளனை
இலங்கை
தமிழர்களின்
குறியீடாகவும்
ஆக்கி
மகிழ்ந்தனர்.
இந்த
இனநோக்கு
வரலாற்று
எழுதுதலே
கிழக்கிலங்கையின்
உயிர்மூச்சான
இனஇ மதஇ
வேறுபாடற்ற
ஒரு மக்கள்
பண்பாட்டினை
இன்று அந்த
மாகாணம்
இழந்து
நிற்பதற்கான
ஊற்றுக்கண்
ஆகும்.
இன்றைய
உலகிலுள்ள
பூகோள
வரைபடங்களுள்
மிகதொன்மையானது
கி.மு. 147 ல் ‘தொலமி’
என்பவர்
வரைந்த
படமாகும்.
கடந்த மாதம்
இலண்டனில்
இடம்பெற்ற
ஏலமொன்றில் 3.9
மில்லியன்
பவுண்களுக்கு
விற்பனையான
இந்த
வரைபடத்தில்
இலங்கை
வரையப்பட்டுள்ளதோடு
கல்முனைபிரதேசம்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது
கல்முனை
துறைமுகமானது
கிறிஸ்துவிற்கு
முற்பட்ட
காலத்தை
சேர்ந்த
கிரேக்கஇ
பாரசீக
வியாபாரிகளின்
இறங்கு
துறையாக
இருந்துள்ளதனையும்
அதுகொண்டிருந்த
சர்வதேச
வர்த்தக
ரீதியான
முக்கியத்துவத்தினையும்
இதனூடாக
அறியமுடிகின்றது.
இப்படியாக
கிறிஸ்துவுக்கு
முற்பட்ட
காலம் தொட்டு
உருவாகியிருந்த
கிழக்கு
மாகாணத்தின்
அரசியல்
வரலாறு
தீகவாவிஇ
மாகமம் போன்ற
தலைநகரங்களிலிருந்து
கோலோச்சிய
உருகுணை
ராச்சியரத்துடன்
இணைந்தே
இருந்து
வந்துள்ளது.
சுமார் 1000
ஆண்டுகாலம்
நீடித்த
உருகுணை
ராச்சியத்தின்
அரசர்கள்
சிங்களவர்களாக
இருந்தபோதும்
கிழக்கிலங்கையின்
ஏழுவகையான
குறுநில
சுயராச்சிய
பிரிவுகளின்
இராசபிரதானிகளாக
தமிழர்களே
ஆண்டு
வந்திருக்கின்றனர்.
கி.பி. 8 ம்
நூற்றாண்டில்தான்
இந்த
நிலையில்
முதன்முதலாக
மாற்றம்
நிகழ்ந்தது.
அனுராதபுரத்தை
தலைநகராக
கொண்டியங்கிய
இராசரட்டயின்
கீழ்
கிழக்கின்
பெரும்பகுதிகள்
செல்லநேரிட்டது.
அதன்பின்னர் 10
நூற்றாண்டில்
சோழரது
படையெடுப்பு
இலங்கை
முழுவதையும்
ஆக்கிரமித்த
வேளைகளில்
கிழக்கின்
அரசுரிமை
மீண்டும்
அந்நியர்
வசப்பட்டது.
இராஜேந்திர
சோழனுடைய
படைகள்
கிழக்கை
அடிமைகொண்ட
வேளைகளில்
ஆதமுனை
என்றழைக்கப்பட்ட
திருக்கோவிலில்
இருந்த சேகு
அசனாபள்ளி
கரவாகு
என்றழைக்கப்படும்
கல்முனையிருந்த
முகைதீன்
பள்ளி
போன்றவற்றை
அழித்தொழித்தனர்(4).
இந்த
செய்திகள்
இற்றைக்கு 1000
ஆண்டுகளுக்கு
முன்பே
கிழக்கின்
கரையோர
பட்டினங்களில்
முஸ்லிம்களின்
வாழ்விடங்கள்
மதவழிபாட்டு
தலங்களுடன்
கூடிய
பலமானதொரு
சமூக
அமைப்பாக
இருந்திருப்பதனை
எடுத்து
காட்டுகின்றது.
இலங்கையில்
1017 ம் ஆண்டு
தொடங்கிய
சோழராட்சி 1070
ல்
தோற்கடிக்கப்பட்டதை
தொடர்ந்து
மீண்டும் 11ம்இ
12ம்
நூற்றாண்டுகளில்
கிழக்கிலங்கை
உட்பட்ட
உருகுணை
ராச்சியத்தின்
கீழ் இருந்த
பெரும்பகுதிகள்
பொலநறுவையிலிருந்து
ஆண்ட
பராக்கிரமபாகுவின்
கட்டுப்பாட்டின்
கீழ் வந்தன.
இந்த
பராக்கிரமபாகுவின்
ஆட்சி
காலத்தில்
மட்டக்களப்பில்
குறுநிலமன்னனாக
தினசிங்கன்
எனும் தமிழ்
மன்னன் ஆண்டு
கொண்டிருந்தான்.
எனினும்
அவனும் அவனது
தமிழ்
குடிகளும்
சமண சமயத்தை
பின்பற்றுவோராயிருந்தனர்(5).
கரவாகு
பகுதியாகிய
கல்முனையை
ரகுகுமான்
ராஜா என்பவர்
ஆண்டுகொண்டிருந்தார்.
இந்த
தினசிங்கனது
ஆட்சி
மீண்டும்
இந்தியாவிலிருந்து
படையெடுத்து
வந்த கலிங்க
மாகோன்
என்பவரால்
தோற்கடிக்கப்பட்டது(6).
இந்த
கலிங்க
மாகோனே
விஜயகாலிங்க
சக்கரவர்த்தி
எனும்
பெயரில்
இலங்கை
முழுவதையும்
ஆண்டான்
அவ்வேளைகளில்
பழுகாமம்
அவனது
கிழக்கு
பிரதேசத்தின்
உபராசதானியாக
இருந்தது.
கரவாகு
பகுதிக்கு
திஸ்ஸ
அலிபோடி
ஆளும்
அதிகாரம்
பெற்ற இராச
பிரதானியாக
இருதுள்ளார்(7).
1225 ல் தொடங்கிய
மாகோனது
ஆட்சி 1256 ல்
தோற்கடிக்கப்பட்டதை
தொடர்ந்து
மீண்டும்
முன்பு போலவே
கிழக்கிலங்கை
உருகுணை
ராச்சியத்தின்
கீழ் வந்தது(8).
இந்நிலை
ஐரோப்பியரது
காலணித்துவ
ஆட்சி
தொடங்கும்வரை
நீடித்ததை
நாம் காணலாம்.
இந்த
வரலாற்று
குறிப்புகளின்
பின்னணியின்
இடையிடையே
ஏற்பட்ட சோழஇ
பாண்டியஇ
ஆட்சிகாலங்களை
தவிர சுமார் 2500
வருடகாலத்தின்
பெரும்
பகுதியில்
கிழக்கிலங்கையானது
தீகவாவிஇ
மாகமம்இ
கண்டி போன்ற
தலைநகரங்களை
கொண்டிருந்த
உருகுணை
ராச்சியத்துடன்
இணைந்தே
காணப்பட்டது.
காலாகாலமாக
கிழக்கில்
வாழ்ந்த
மக்கள்
தமிழையே
பேசினாலும்
பௌத்தமும்இ
சைவமும்இ
இஸ்லாமும்இ
ஏன் சமணமும்
கூட
அவர்களால்
பின்பற்றப்பட்டு
வந்துள்ளன.
இனமத
வேறுபாடுகள்
அவர்களை
கூறுபோட்டிருக்கவில்லை.
உருகுணையின்
கீழ் இருந்த
போதும்
அம்மக்கள்
தத்தம்
தனித்துவங்களை
பேணும்
வகையிலான
வன்னிமைகள்
என்றழைக்கப்ட்ட
சுயராச்சிய
பிரிவுகளை
பேணியே
வந்திருக்கிறார்கள்
என்பது
குறிப்பாக
நோக்கற்பாலது.
காலணித்துவத்தின்
வருகை
இலங்கையில்
காலணித்துவ
ஆட்சி
ஏற்பட்டபோது
மூன்றுவகை
அரசுகள்
காணப்பட்டிருந்தன.
கோட்டை
ராட்சியம்இ
கண்டி
ராட்சியம்இ
யாழ்ப்பாண
ராட்சியம்
எனும்
அரசுகளே
அவையாகும். 1505
இல் முதன்
முதலாக
இலங்கையில்
காலடி
வைத்தவர்கள்
போர்த்துக்கேயராகும்.
இவர்கள் 1597 இல்
கோட்டை
ராட்சியத்தை
தமது
முழுக்கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு
வந்தனர். அதன்
பின்னர் 1619 இல்
யாழ்பபாண
ராட்சியத்தையும்
போர்த்கேயர்
தோற்கடித்து
கைப்பற்றினர்.
இந்த
வேளைகளில்
கொட்டியாரம்
என்றழைக்கப்பட்ட
திருகோணமலைஇ
மட்டக்களப்புஇ
பழுகாகமம்இ
பாணமை போன்ற
நால்வகை
வன்னிமைகள்
கண்டிராட்சியத்துடன்
இணைந்தே
இருந்தன.
இறுதியாக 1815
இல்
ஆங்கிலேயேர்
கண்டிராட்சியத்தை
வீழ்த்தும்
வரை தமது
சுதந்திரத்தை
விட்டுக்கொடுக்காமல்
கண்டி
ராட்சியத்தின்
பிரசைகள்
கடுமையாகப்
போராடி
வந்தனர்.
1818 ல்
ஆங்கிலேயருக்கு
எதிராக
கண்டியில்
ஏற்பட்ட
கிளர்ச்சியானது
ஆங்கிலேயர்
தமது
ஆட்சியமைப்பில்
கூடிய கவனம்
செலுத்த
வேண்டிய
கட்டாயத்தை
அவர்களுக்கு
உணர்த்தியது.
கண்டி
பிரசைகளின்
தேசிய
உணர்வானது
ஆங்கிலேயருக்கு
அச்சமூட்டியது.
எனவேதான்
எதிர்கால
பாதுகாப்பினை
உறுதிபடுத்தி
கொள்வதற்காக
கண்டி
ராச்சியத்தை
கூறு போடும்
முயற்சியில்
ஆங்கிலேயர்
இறங்கினர். 1832
இல்
கோல்புறுக் -
கமறோன்
குழுவினரின்
ஆலோசனையின்
பெயரில்
இலங்கை 5
பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டு
மாகாணங்கள்
எனும் புதிய
நிர்வாக அலகு
உருவாக்கப்பட்டது.
இதன்படி
கண்டிராச்சியத்தின்
தூரப்பகுதிகளான
(திசாவைகள்)
அனுராதபுரத்தின்
வடக்கேயிருந்த
சில பகுதிகள்
மற்றும்
மன்னார்இ
காளிதேசம்
என்று
அழைக்கப்பட்டு
நீண்டதொரு
வரலாற்று
காலத்தில்
தனியரசாய்
திகழ்ந்த
முல்லைத்தீவு
போன்றவற்றை
யாழ்ப்பாண
இராச்சியத்துடன்
இணைத்து
வடமாகாணமாகவும்இ
கண்டிராச்சியத்தின்
தீகவாவி
அடங்கிய
மட்டக்களப்பு
திருகோணமலை
பகுதிகளை
ஒருங்கிணைத்து
கிழக்கு
மாகாணமாகவும்
புதிய
அலகுகள்
உருவாக்கப்பட்டன(9).
ஆட்சி
அதிகார
ரீதியாக
மட்டும் அல்ல
கிழக்கு
மாகாண மக்கள்
தமக்கான
சமூகவியல்
அம்சங்களிலும்
யாழ்ப்பாணத்தில்
இருந்தும்
அங்கு வாழும்
மக்களில்
இருந்தும்
அதிகளவில்
வேறுபட்டே
நிற்கிறார்கள்
என்பதுவும்
மிகமுக்கியமானதொன்றாகும்.
கிழக்கு
மாகாண மக்கள்
தமது கலைஇ
கலாசாரம்இ
பண்பாடுஇ
சடங்கு
சம்பிரதாயங்கள்இ
மற்றும் உணவு
முறைகளிலும்
கூட தமக்கான
தனித்துவமான
பழக்கவழக்கங்களை
கொண்டிருக்கிறார்கள்.
இவைகளில்
பெரும்பாலானவை
ஆரியகலப்பற்றவையாகவும்
தாய்வழி
உரிமைகளை
பேணுபவையாகவும்இ
மற்றும்
சாதிவாரியாக
தீண்டாமை
இறுக்கமற்றவையாகவும்
காணப்படுகின்றது.
இப்பண்புகள்
ஒரு
சமூகவியல்
பார்வையில்
முற்போக்கு
அம்சங்கள்
நிறைந்தனவாகும்.
இந்த
அம்சங்களடங்கிய
சமூக
ஒழுங்குகளையும்
அவைசார்ந்த
பண்பாட்டு
கூறுகளையும்
பேணிபாதுகாப்பதற்காக
கிழக்குமாகாணம்
தனக்கான
தேசவழமைகளை
காலா காலமாக
கைக்கொண்டு
வந்திருக்கின்றது.
அந்தவகையில்
1876 ல் ஊ.டீசுஐவுழு
என்பவரால்
கிழக்கில்
நிலவிய இந்த
தேசவழமைகள்
ஒரு நூலாக
தொகுக்கப்பட்டு
‘முக்குவர்
சட்டம்’
எனும்
அந்தஸ்தை
பெற்றது(10).
யாழ்ப்பாண
மக்களிடையே
காணப்பட்ட
இத்தகைய
தேசவழமைகள்
எப்படி 1707 இல்
தொகுக்கப்பட்டு
யாழ்ப்பாண
தேசவழமை
சட்டம் எனும்(11)
சட்ட
அந்தஸ்தை
பெற்றனவோ
அதேபோன்று
கிழக்கில்
வாழ்ந்த
முஸ்லிம்கள்
அல்லாத
தமிழர்களுக்குரியனவாக
இந்த
முக்குவர்
சட்டமும்
ஆங்கிலேயரால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பேசுகின்ற
மொழியில்
தமிழர்களாகவே
இருந்தபோதும்
கிழக்கும்
வடக்கும் ஒரே
விதமான
சட்டத்திட்டங்களால்
கட்டுப்படுத்தப்பட
முடியாதவையாக
உள்ளன என்பதை
இங்கு
கூடியுள்ள
யாவருக்கும்
சுட்டிக்காட்ட
கடமைப்பட்டுள்ளேன்.
இதே போன்றே
கிழக்கில்
வாழும்
முஸ்லிம்களுக்கும்
அவர்களது மத
நம்பிக்கையின்
அடிப்படையிலமைந்த
இஸ்லாமிய
சரியா
சட்டகோவை
இலங்கையில்
காலணித்துவ
ஆட்சியாளர்களினாலேயே
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை
நம் எல்லோரது
கவனத்திலும்
கொள்ளப்பட
வேண்டியதொன்றாகும்.
இந்நிலையில்தான்
நாடுபிடித்துவந்த
அன்னியரின்
வருகை எமது
நாட்டினுடைய
அரசியலில்
மட்டுமல்ல
சமூக
பொருளாதார
கட்டமைப்புகளிலும்
பாரிய
மாற்றங்களை
ஏற்படுத்தியது.
அவையனைத்தும்
முழுஅளவிலான
இலங்கையருக்கு
பாதகமான
அம்சங்களையே
பெருமளவில்
ஏற்படுத்தியிருந்தாலும்
யாழ்ப்பாணத்தவருக்கு
இந்த
அன்னியரின்
வருகை பெரும்
வரப்பிரசாதமாய்
அமைந்தது.
காலணித்துவ
ஆட்சியாளர்களின்
நவீன அரசியல்
செயற்பாடுகளும்
நீதி, நிர்வாக
சேவைகளும்
பெருந்தோட்டத்
துறையினூடு
விரிவடைந்த
போக்குவரத்துஇ
தபால்சேவை
போன்றவைகளும்
அறிமுகப்படுத்திய
உத்தியோகங்கள்
யாழ்ப்பாண
மக்களை
கவர்ந்தது.
பெருந்தோட்டத்
துறையின்
மேற்பார்வையார்களாகவும்
நீதிநிர்வாகத்
துறையின்
அடிமட்ட
உதவியாளர்களாகவும்
பிரித்தானிய
ஆட்சியாளர்களுக்கு
கைகட்டி சேவை
புரிந்த
இவர்கள்
காலப்போக்கில்
நிர்வாகத்
தேர்ச்சி
பெற்ற
உத்தியோகத்தர்களாகவும்இ
அரச
அதிகாரிகளாகவும்இ
ஆசிரியர்களாகவும்
இலங்கை
எங்கும்
வியாபித்தனர்.
இந்த போக்கு
ஆட்சியாளர்களிடம்
சம்பளம்
பெறும்
கணிசமான ஒரு
கூட்டத்தினராக
யாழ்ப்பாணத்தவரை
அடையாளம்
காட்டியது.
இந்த
உத்தியோகத்தர்களின்
சமூக பரம்பலே
யாழ்ப்பாணத்தில்
ஒரு மத்தியதர
வர்க்கத்தின்
தோற்றத்துக்கு
வித்திட்டது.
வெள்ளை
ஆதிக்கத்தின்
பாதுகாவலராக
தம் வாழ்வைத்
தொடங்கிய
இவ்வர்க்கத்தினரே
படிப்படியாக
இலங்கையருக்கான
அரசியல்
போக்குகளை
நிர்ணயிப்பவர்களாகவும்
உருவாகினர்.படிப்பறிவு,
பணம்,
அந்தஸ்து
என்பவற்றை
அடிப்படையாகக்
கொண்டே
இலங்கை
மக்களுக்கான
அரசியல்
கோபுரத்தை
வெள்ளயைர்
அத்திவாரம்
இட்டனர்.
ஆகவேதான்
இந்த
அத்திவாரம்
ஆனது
யாழ்ப்பாணத்திலேயே
கட்டப்பட
முடிந்தது.
அங்கிருந்து
உருவான
அரசியல்
வாதிகளே
இலங்கையின்
முதல்
தலைமுறை
அரசியல்
தலைவர்களாகவும்
இலங்கை
அரசியலில்
போக்கை
தீர்மானிக்கும்
சக்தி
பெற்றவர்களாகவும்
பரிணமித்தனர்.
இலங்கையின்
சிங்கள
மக்கள்
இடத்திலும்
இதுபோன்றதொரு
மத்தியதரவர்க்கம்
உஇருவாகியிருந்தது.
அங்கு ராஜ
பரம்பரையினர்
என தம்மைச்
சொல்லிக்கொள்ளும்
கொவிகம
எனப்படுகின்ற
ஒருவித சமூக
அந்தஸ்துகொண்ட
பிரிவினரே
மேற்படி
மத்தியதர
வர்க்கமாக
உருவாகியிருந்தனர்.
இவர்கள்
சிங்களவராய்
இருந்தபோமுதும்
கராவஇ சாலக
என்கின்ற
சாதிப்பிரிவினரான
சிங்களவரை
தம்மிலும்
கீழானவர்களாகவே
கணித்து
வந்தனர்.
இந்த
வகையில்
தமிழ் - சிங்கள
உயர்வர்க்க
கூட்டின்
பிரதிநிதியான
சேர்.பொன்.இராமநாதன்
எனும்
யாழ்ப்பாணத்தவர்
வெள்ளையரிடையே
பெருமதிப்பைப்
பெற்றிருந்தார்.
ஆங்கிலேயருக்கு
மிக
நெருங்கிய
விசுவாசியான
இவர் 1911 ம்
ஆண்டு படித்த
இலங்கையருக்கான
முதல்
செனட்சபை
உறுப்பினர்
ஆகும்
வாய்ப்பை
பெற்றார்.
கல்வியறிவு
பெற்றவர்களுக்கும்
சொத்துரிமைகொண்ட
தனவந்தர்களுக்கு
மட்டுமே
அந்நிலையில்
வாக்களிக்கும்
தகுதி
இருந்தது.
ஆதலால் மொத்த
சனத்தொகையில்
சுமார் 4
வீதமான
மேல்தட்டு
வர்க்கத்தினர்
மட்டுமே இந்த
வாய்ப்பை
பெற்றிருந்தனர்.
இவ்வகையில்
அரசியல்
பிரதிநிதிகளை
தெரிவுசெய்யும்
அதிகாரம்
கொண்டவர்கள்
தமிழ் - சிங்கள
வேறுபாடுகள்
எதையும்
கொண்டிருக்கவில்லை.
இனவேறுபாடுகளை
தாண்டிய
உயர்தட்டு
வர்க்க
ஒற்றுமையே
இந்த இரு
சமூகங்களின்
பிரதிநிதிகளிடம்
காணப்பட்டது.
1911ம் ஆண்டு
தேர்வில்
சேர்.பொன்.இராமநாதன்
தெரிவு
செய்யப்பட்டமை
பற்றி
அவ்வேளை
கவனர் ஆக
இருந்த சேர்.கியு.கிளிபார்ட்
கூறுகையில் “படித்த
இலங்கையரை
தேர்ந்தெடுப்பதில்
தமிழர்
சிங்களவர்
என்ற
இனவேறுபாடு
இல்லாமல்
தமிழர் உயர்
சாதியினரும்
சிங்கள உயர்
சாதியினரும்
சேர்ந்த ஓர்
உயர்சாதியினரையே
தெரிவுதெய்தார்கள்”
என
தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
1917 ம் ஆண்டு
தேர்விலும்
இது மேலும்
உறுதியானது
கரையோர
சிங்களவரான
மாக்கஸ்
பெர்னாண்டோ
என்பவரை
விடுத்து
தமிழராய்
ஆனபோதும்
வெள்ளாள
சமூகத்தை
சேர்ந்தவரான
சேர்.பொன்.இராமநாதனையே
சிங்களவரும்
சேர்ந்து
தெரிவுசெய்தனர்.
1919 இல் உருவான
இலங்கை தேசிய
காங்கிரசின்
தலைவராக
யாழ்ப்பாண
தமிழரான சேர்.பொன்.அருணாசலம்
என்பவர்
தெரிவானார்.
ஆனாலும்
இன்னிலையை
சுதந்திரத்தைநோக்கிய
சீர்திருத்தங்களும்இ
மாற்றங்களும்
தொடர்ந்து
அனுமதிக்கவில்லை.
இலங்கை
முழுக்க தமது
ஆதிக்கத்தை
பேணிவந்த
யாழ்ப்பாண
மத்தியவர்க்கத்தினரின்
எதிர்கால
அந்தஸ்தை
அரசியல்
மாற்றங்கள்
கேள்விக்குறியாக்கியது.
அதுவரைகாலமும்
இலங்கையின்
அரசியல்இ
சமூகஇ
பொருளாதார
கட்டுமானங்களில்
நிரம்பியிருந்த
யாழ்ப்பாணத்தவரின்
செல்வாக்குகளை
தொடர்ந்துவந்த
காலங்களிலும்
காப்பாற்றி
கொள்ளும்
எத்தனிப்போடு
அன்றைய
அதிகார ருசி
கொண்ட
தலைமைகள்
முன்னெடுத்த
நகர்வுகளே
இலங்கை
தமிழர்களின்
வாழ்வை
சீர்குலைத்தது.
இத்தலைமைகள்
அரசியல்
விழிப்புணர்வுகள்
பரந்துபட்ட
மக்களுக்கு
ஏற்பட்டுவிடக்கூடாது
என்பதில்
கவனமாயிருந்தனர்.
அதற்காகவே
வெள்ளையாட்சியாளர்களின்
அரசியல்
சீர்திருத்த
நடவடிக்கைகளை
கடுமையாக
எதிர்க்கவும்
துணிந்தனர்.
குறிப்பாக
அரசியல்
சீர்திருத்தத்திற்கான
டொனமூர்
ஆணைக்குழு
முன்
சாட்சியமளிக்கையில்
எல்லா
பிரசைகளுக்கும்
தமது
தலைமைகளை
தெரிவுசெய்யும்
வாய்ப்பை
வழங்கும் “சர்வசனவாக்குரிமை”
வழங்கப்படுவதை
கடுமையாக
எதிர்த்து
விளக்கமளித்தனர்.
சர்வனவாக்குரிமை
வழங்கப்பட்டால்
அது “இந்து மத
வாழ்க்கை
முறைக்கு
பழிகேடு
விளைவிக்கும்
என்றும்”கும்பலாட்சிக்கு
வழிவகுக்கும்”
என்றும்
வாதிட்டார்
சேர்.பொன்.இராமநாதன்.
அதாவது
யாழ்ப்பாணத்திலுள்ள
உயர்சாதிப்பிரிவை
தவிர
மற்றயோரும்
கிழக்கிலிருக்கும்
முஸ்லிம்கள்இ
முக்குகர்கள்இ
மற்றும்
சூத்திரர்கள்
அனைவருமே
சமூகத்தின்
கீழ்நிலையில்
இருக்க
வேண்டுமென்பதற்காக
பகிரங்கமாக
கீழ்தரமான
கருத்துகளை
தெரிவித்தார்
இவர்.
கிழக்கிலங்கை
மக்களெல்லோரும்
அரசியலுக்கு
வந்தால்
அதுவே
கும்பலாட்சிக்கு
வழிவகுக்கும்
என்பதே அவரது
வாதமாயிருந்தது.
ஆனபோதும்
வெள்ளையர்களது
நிர்வாகம்
இவ்விதவாதங்களை
கவனத்தில்
கொள்ளாது
சர்வனவாக்குரிமை
வழங்குவதை
உறுதிசெய்தது.
சர்வசனவாக்குரிமை
விரைவில்
வழங்கப்படப்போகுதென்ற
எதிர்பார்ப்புகள்
உறுதியானதும்
இதனால் தமது
தலைமைகளை
காப்பாற்றி
கொள்வதற்காக
தமிழ்மக்களை
ஏமாற்றி
தம்வசம்
இழுக்கும்
சூது
விளையாட்டுக்களில்
ஈடுபடத்தயாராகினர்
யாழ்ப்பாணத்
தலைமைகள்.
இலங்கைத்
தேசியகாங்கிரசில்
தமிழருக்கு
உரிய இடம்
அளிக்கப்படவில்லை
என்ற
குற்றச்சாட்டுகளுடன்
1921 இல் அந்த
அமைப்பை
விட்டு
வெளியேறினார்
சேர்.பொன்.அருணாசலம்.
1923 இல்
இலங்கைத்
தமிழ் லீக்
எனும்
அமைப்பைத்
தொடங்கிய
கையோடு
தமிழீழம்
பெறுவதே
அதனது
குறிக்கோள்
என கடுமையான
பிரச்சாரத்தில்
இறங்கினார்.(12)
1923 இல்
நடந்த
இலங்கைத்
தமிழ் லீக்
கூட்டத்தில்
“தமிழீழம்
என்ற நம்
குறிக்கோளை
அடைய
வேண்டுமானால்
எம்மிடையே
ஒற்றுமையை
வளர்ப்பதோடுஇ
எமது
கொள்கைகளை
நாம் என்றும்
கடைப்பிடிக்கவேண்டும்.
எமது
பாரம்பரியத்தை
நினைவு
கூருவதோடு
எமது
தனித்துவத்தை
நாம்
பாதுகாக்கவேண்டுமானால்
ஒரு பலமுள்ள
சமுதாயமாக
எம்மை
மாற்றிக்கொள்ளவேண்டும்”
என சேர்.பொன்.அருணாசலம்
முழங்கினார்(13).
தமிழர்
ஒற்றுமைக்கோஇ
தமிழர்
பாரம்பரியத்திற்கோஇ
தமிழர்
தனித்துவத்துக்கோ
அன்றைய
நிலையில் (1920
களில்)
சிங்களவர்களால்
எந்தவித
ஊறும்
விளைவிக்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக ஆங்கில
மமதையில்
ஆட்சி அதிகார
பீடமாக
உயர்ந்திருந்த
யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த
இந்தத்
தலைமைகளே
தமிழ்மக்களின்
ஒற்றுமை
குறித்து
அக்கறைப்படாது
இருந்தவர்கள்.
சொந்தமக்களின்
உரிமைகளை
மறுத்து
சிங்கள
அதிகார
பீடத்துடன்
அதிகாரத்தை
பங்கிட்டுக்கொண்டிருந்தவர்கள்.
தமிழர்
பாரம்பரியத்தைகுழிதோண்டிப்புதைத்து
தாய்மொழியை
ஈனமொழியாக்கியவர்கள்.
அப்படியிருக்க
அவர்களே
இவற்றுக்காக
அழுவது
என்பது ஆடு
நனைகிறதே
என்று ஓநாய்
அழுவதற்கு
ஒப்பாய்
இருந்தது.
ஆகவே
எந்தவொரு
பாரிய
அச்சுறுத்தலையும்
தமிழ் சமூகம்
எதிர்கொள்ளாத
வேளையில்
வெறும்
யாழ்ப்பாணத்து
மேல்தட்டினரின்
நலங்களுக்கு
பலம்
சேர்ப்பதற்காகவே
இந்த தமிழீழ
கோரிக்கை 1923
இல் இருந்தே
போலியானதாக
எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த
எவ்விதத்திலும்
அர்த்தபுஷ்டியற்ற
ஒரு போலிப்
பிரச்சாரத்தினூடு
கிழக்கு
மக்களையும்
உள்வாங்கி ‘வாக்கு
பொறுக்கி’
அரசியல்
நடத்துவதற்காகவே
இந்த
தமிழீழத்தை
முன்வைத்தனர்
என்பதை
இனியாவது
தமிழர்களாகிய
நாமும்
கிழக்கு
சமூகங்களும்
புரிந்துகொள்ள
வேண்டும்.
வெற்று
இனவாதக்
கூச்சலாகவும்,
விசமத்தனமானதொன்றாகவும்
உருவாக்கப்பட்ட
ஒரு
நச்சுப்பிரச்சாரமே
இந்த
தமிழீழம்
என்றால் அது
மிகைப்படுத்தப்பட்ட
கூற்றல்ல.
1944 ஆண்டு
கொண்டுவரப்பட்ட
இலவசக்
கல்வித்திட்ட
மசோதாவை
பாராளுமன்றத்தில்
எதிர்ப்பதில்
ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ
மகாதேவாஇ
சிறிபத்மநாதன்
என்கின்ற
தமிழ் பெரும்
தலைவர்கள்
ஒற்றுமையாக
நின்று
எதிர்த்தனர்.
மத்தியதர
வர்க்கம்
நிறைந்த
யாழ்ப்பாணத்தைத்
தவிர
கிழக்கிலங்கை
மக்களும்இ
தென்னிலங்கை
மக்களும்
கல்வியறிவு
பெறக்கூடாது
என்பதில்
இந்த
யாழ்ப்பாணத்
தலைமைகள்
மிகக் கவனமாக
செயற்பட்டனர்.
பாமர
மக்களுக்கு
அறிவுப்
பொக்கிசத்தைத்
திறந்துவிட
முனைந்த
சிங்கள
அரசியல்வாதியான
டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா
போன்றவர்களுடன்
ஒப்பிடுகையில்
நமது
தலைமைகளே
துரோகங்களின்
பிறப்பிடமாய்
இருந்திருக்கிறார்கள்.கல்வியில்
பின்தங்கியிருந்த
கிழக்கிலங்கை
தென்னிலங்கைப்
பிரதேசங்களுக்கு
அவ்வாய்ப்புகள்
கிடைக்காது
தடுக்க
முயன்ற
யாழ்ப்பாணத்
தலைமைகளின்
வஞ்சகத்
தன்மையை நாம்
புரிந்துகொள்ள
வரலாறுகள்
இதுவரை
வாய்ப்பளிக்கவில்லை.
ஐக்கியதேசியக்
கட்சி
அரசாங்கத்தில்
அவ்வேளையில்
அமைச்சராய்
இருந்த
அருணாசலம்
மகாதேவா
என்பவரை
தமிழினத்
துரோகி
என்றும்
தமிழ் பேசும்
மக்களின்
மீட்பர் தான்
மட்டுமே
என்றும்
திரும்பத்
திரும்ப பேசி
1947 ஆம் ஆண்டு
தேர்தல்
பிரச்சாரத்தில்
ஈடுபட்டார்
ஜீ.ஜீ.. ஆனால்
அந்த
தேர்தலில்
வெற்றிபெற்ற
கையோடு டி.எஸ்.சேனநாயக்காவின்
இரு அமைச்சு
பதவிகளுக்காக
ஐக்கியதேசியக்
கட்சி
ஆட்சியில்
பொன்னம்பலமும்
பங்கெடுத்தார்.
15-நவம்பர்-1948
அன்று
பாராளுமன்றத்தில்
யு.என்.பி.
அரசு
கொண்டுவந்த
பிரஜாவுரிமைச்
சட்த்தின்மீது
தமிழ்காங்கிரஸின்
பொன்னம்பலம்
தலைமை
ஆதரவைத்
தெரிவித்தது.
இதன்மூலம் 10
இலட்சம்
தோட்டத்தொழிலாளர்களின்
வாக்குரிமையை
ஒரேநாளில்
பறித்த யு.என்.பி
முதலாளித்துவ
அரசினது
அநாகரிக
செயலுக்கு
பொன்னம்பலம்
உடந்தையாயிருந்தார்.
இந்த
செயற்பாட்டின்மீதும்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம்
தலைமையிலான
ஒரு
குழுவினர்
தமிழ்காங்கிரசின்
தலைமைமீது
முரண்பட்டனர்.
இந்த
முரண்பாடுகளின்
தொடர்ச்சியாகவே
இலங்கை
தமிழ்காங்கிரசில்
இருந்து
செல்வநாயகம்
வெளியேறி “தமிழரசுக்கட்சி”
என்கின்ற ஒரு
அரசியல்
கட்சியைத்
தோற்றுவித்தார்.
“தமிழ்த்
தேசியம்”
என்கின்ற
ஒன்று நோக்கி
முஸ்லிம்இ
மலையகஇ
கிழக்குவாழ்
தமிழர்களை
அணிதிரட்டும்
பணியில் அவர்
ஈடுபட்டார்.
மதஇ பிரதேச
எல்லைகளைத்
தாண்டிய
தமிழ்பேசும்
மக்களுக்கான
ஒருமித்த “ஆன்மா”
ஒன்றினை
கட்டியமைக்கும்
முயற்சியில்
அவர்
ஈடுபட்டிருந்தார்
என இதனைக்
கொள்ளலாம்.
பரந்துபட்ட
தமிழ் பேசும்
மக்களுக்கான
சமஸ்டிக்
கோட்பாடுகளுடனும்
மலையக
மக்களின்
அடிப்படை
உரிமைகளுக்கான
கோரிக்கைகளுடனும்
மக்களைச்
சந