நாவினால் சுட்ட வடு
ஆறும்.
தீயினால் சுட்ட வடு
ஆறும்.
நாயைப் போல் தெருத்தெருவாய்
இழுத்து வந்து சுட்ட வடுவும்
ஆறும்
உரித்து உப்புத் தடவி காயவிட்ட தோல்போல்
ஆறாது
சந்ததியினால்...
சாதியினால் ... சுட்ட
' வடு'
jypj; mwpf;if jPHkhdq;fs; khehl;Lf; fl;Lius; NeHfhzy; khehL fpof;fpd; RaepHzak;
Declaration
Resolution








| |
லண்டனில்
இடம் பெற்ற
இரண்டாவது
தலித்
மாநாட்டைத்
தொடர்ந்து
தலித்
மேம்பாட்டு
முன்னணியினர்
வெளியிட்டுள்ள
அறிக்கை.

கடந்த இரு
வருடங்களாக
ஐரோப்பாவை
மையமாகக்
கொண்டு
இயங்கிவரும்
இலங்கைத்
தலித் சமூக
மேம்பாட்டு
முன்னணியினராகிய
நாம்
அண்மையில்
லண்டனில் ஒரு
பகிரங்க
மாநாடு
ஒன்றினை
நடாத்தியிருந்தோம்.
புகலிடத்தில்
சிறுசஞ்சிகைகள்,
இலக்கிய
சந்திப்பு,
பெண்கள்
சந்திப்பு
போன்ற மாற்று
சிந்தனைகளுக்கான
தளங்களினூடாக
நீண்டகலாமாக
உருவாகி
வளர்ந்த
தலித்தியம்
எனும்
சிந்தனைப்போக்கின்
வளர்ச்சிக்கட்டமாகவே
எமது தலித்
மேம்பாட்டு
முன்னணி
முகிழ்ந்தது.
நீண்டகாலமாக
தமிழ் பேசும்
மக்களிடையே
காணப்படும்
ஏற்றத்தாழ்வுகளுக்கும்,
சமூகநீதி
மறுப்புக்கும்
ஆயுத கலாசார
வன்முறை
சூழலுக்கும்
எதிராக
செயற்பட்ட பல
தோழமைகளின்
அயராத
முயற்சியினாலேயே
எமது முன்னணி
உருக்கொண்டது.
அவ்வகையில்
சாதிய
ரீதியாக
ஒடுக்கப்பட்டு
இலங்கையில்
வாழும் எமது
தலித்
மக்களின்
எதிர்கால
சமூக
மேம்பாடு
குறித்த
கருசனையே
எமது முக்கிய
வேலைத்திட்டமாக
அமைந்துள்ளது.
போரின்
வீச்சுகளுக்குள்
முகம்கொடுத்து
எதிர்கால
மீட்சி
பற்றிய
எவ்வகை
வெளிச்சங்களுமின்றி
வாழும் எமது
தலித்
மக்களின்
எதிர்காலம்
பற்றி நாம்
அதீத சிரத்தை
கொண்டுள்ளோம்.
சமாதான சூழல்
ஒன்றோ, ஏதோ
ஒரு வகையான
தீர்வுத்
திட்டங்களோ
சாத்தியமாகின்ற
பட்சத்தில்
இந்த தலித்
மக்களின்
சமூக நிலை
எப்படியிருக்கும்
எனும்
கேள்விகள்
எம்மை கடும்
அச்சத்திற்கு
உள்ளாக்கியுள்ளது.
இதன்காரணமாக
இலங்கையில்
ஏற்படப்
போகின்ற
அதிகார
கைமாற்றம்,
அதிகார
பங்கீடு,
அதிகார
பரவலாக்கம்
போன்ற
நிர்வாகப்
கட்டமைப்புகளுக்குள்
தலித்
மக்களின்
இடம் என்ன?
என்கின்ற
கேள்விகளை
நாம் பலமாக
எழுப்பக்
கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 2006 ஆம்
ஆண்டு
நவம்பர்
மாதம்
ஸ்ருட்காட் (ஜேர்மனி)
நகரில் இடம்
பெற்ற (இலங்கை
ஜனநாயக
முன்னணி
சார்பில்)
இரு நாள்
மாநாட்டில்
நாமும்
பங்கெடுத்தோம்.
அங்கு
ஆனந்தசங்கரி
போன்ற
அரசியல்
தலைவர்களும்,
ஜரோப்பிய
மட்டத்தில்
செயற்படும் அரசியல்
ஆய்வாளர்கள்,
செயற்பாட்டாளர்கள்
என பல
முக்கியஸ்தர்களும்
கலந்து
கொண்டிருந்தனர்.
அங்கு
எங்களது
முன்னணிசார்பில்
அரசியல்
தீர்வுத்
திட்டம்
சம்பந்தமான
எமது அறிக்கை
ஒன்றினை
சமர்ப்படுத்தியிருந்தோம்.
இதே போன்று
புகலிடத்தில்
நிகளும்
ஜனநாயக
அமர்வுகள்
அனைத்திலும்
எம்மால்
முடிந்தவரை
பங்கு கொண்டு
எமது
கோரிக்கைகளை
வலுப்படுத்தி
வருகின்றோம்.
எமது தலித்
அரசியல்
பற்றிய
விழிப்புணர்வுகளையும்,
ஆழமான
புரிதல்களையும்
ஏற்படுத்தும்
முயற்சியாக ‘வடு’
எனும்
மாதாந்த சிறு
இதழ்
ஒன்றையும்
எமது முன்னணி
வெளியிட்டு
வருகின்றது.
கடந்த ஆண்டு
ஒக்டோபர்
மாதம் பரிஸ்
நகரில் எமது
முன்னணி
உறுப்பினர்களை
ஒன்று
சேர்த்து
வலுப்படுத்தும்
நோக்கில்
முதலாவது
தலித்மாநாடு
ஒன்றினை
நடத்தியிருந்தோம்.
இதில்
இலங்கையின்
அரசியலில்
ஈடுபாடு
கொண்ட பலரும்
கூட கலந்து
கொண்டிருந்தனர்.
இருநாள்
அமர்வின்
இறுதியாக
இலங்கை
இனப்பிரச்சனைக்கான
தீர்வுத்
திட்டத்தில்
தலித்
மக்களின்
நிலை எனும்
தலைப்பில்
பிரான்ஸ்,
இங்கிலாந்து,
கனடா,
ஜேர்மனி,
சுவிஸ் போன்ற
நாடுகளிலிருந்து
கலந்து கொண்ட
ஆய்வாளர்களிடமிருந்து
மூன்று
வகையான ஆலோசனைகள்
அடங்கிய
திட்டங்கள்
வெளியிடப்பட்டன
அவற்றினை
ஒட்டி
நிகழ்ந்த
விவாதங்களின்
பெறுபேறாக
சில உடனடி
கோரிக்கைகள்
அடங்கிய தீhமானங்களும்
மாநாட்டின்
இறுதியில்
மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த
மாநாட்டின்
தொடச்சியாக
தலித்
அரசியலில்
ஈடுபாடு
கொண்ட லண்டன்
வாழ்
தோழர்களின்
உதவியுடன்
அண்மையில் (பெப்ரவரி
16,17) இரண்டாவது
தலித்
மாநாட்டை
ஏற்பாடு
செய்ய
முடிந்தது.
இம்மாநாட்டிலும்
இடம் பெற்ற
உரையாடல்கள்,
விவாதங்கள்,
ஆலோசனைகள்
என்பன எமது
முன்னணியின்
அவசியத்தையும்
எமக்கு
நன்குணர்த்தியுள்ளன.
இவற்றின்
பெறுபேறாக
இம்மாநாடு
அதில்
பற்கெடுத்த
பங்கேற்பாளர்களின்
பெரும்பான்மை
ஆதரவுடன்
கீழ்வரும்
தீர்மானங்களை
உடனடி
வேலைத்திட்டங்களாக
நிறைவேற்றியுள்ளது.
இலங்கையிலிருந்து
வெளிவரும்
வெகுஜன
பத்திரிகைகளில்
திருமண
விளம்பரப்பகுதியில்
இடம்பெறும்
சாதி
விளப்பரங்கள்
உடனடியாக
நிறுத்தப்படவேண்டும்.
எமது
சமூகத்தில்
சாதிகாப்பாற்றும்
மனோபாவத்தை
பகிரங்கமாகவே
இவ்விளம்பரங்கள்
ஊக்கிவித்து
வருவதனாலும்,
மறைமுகமாக
தாழ்த்தப்பட்ட
தலித் மக்களை
மன
உளைச்சலுக்குள்ளாக்கி
அவர்கள் மீது
அர்த்தமற்ற
குற்ற
உணர்வினை
உருவாக்கும்
பிற்போக்குத்தனமான
பணியை
இவ்விளம்பரங்கள்
மேற்கொண்டு
வருவதனாலும்,
இத்திருமண
விளம்பரங்கள்
என்கின்ற
பகுதியில்
குறிப்பிடப்படுகின்ற
சாதிரீதியான
தேர்வுகளும்
விரப்பங்களும்
மனித உரிமை
மீறல்களின்
ஒரு
அம்சமாகவே
இம்மாநாடு
கருதுகின்றது.
ஆகவே மனித
உரிமை பேணும்
சமூதாயமொன்றை
உருவாக்கும்
முற்போக்கான
எதிர்காலத்திற்கு
வழிகாட்டவேண்டிய
பொறுப்புமிக்க
பத்திரிகைகள்
உடனடியாக
மேற்படி
திருமண (சாதி)
விளபம்பரங்களை
வெளியிடும்
பாரம்பரியத்திற்கு
முற்றுப்புள்ளி
வைக்குமாறு
இம்மாநாடு
கோருகின்றது.
2 நாட்டில்
அமைதி
கொண்டுவரும்
ஏற்பாடுகளில்
ஒன்றாக
வடமாகாணத்திற்கான
தற்காலிக
நிர்வாக சபை
ஒன்றை
ஏற்படுத்தும்
முன்னேற்பாடுகள்
நடைபெறுகின்றது.
இந்நிர்வாக
சபைக்கு
நியமிக்கப்படவிருக்கும்
ஐவர் அடங்கிய
குழுவிற்கான
தெரிவில்
குறைந்த
பட்சம் தலித்
சமூகத்தின்
பிரதிநிதி
ஒருவர்
தெரிவு
செய்யப்பட
வேண்டும்.
தமிழ் சமூகம்
சாதிரீதியான
பாரிய
முரண்பாட்டை
இன்றுவரை
கடைப்பிடித்து
வருவதனை
கருத்தில்
கொண்டும்,
அதனூடாக
மிகமோசமான
சமூக
ஒடுக்குமுறை
இடம்பெற்று
வருவது
நிகழ்கால
யதார்த்தமாயிருப்பதனாலும்,
இதுவரையான
யுத்தம்
ஏற்படுத்திய
நேரடி,
மறைமுக
அனர்த்தங்களில்
மிக மோசமான
அளவில்
பாதிக்கப்பட்டு
அதிலிருந்து
மீள்வதற்கான
சமூக
பொருளாதார
வாய்ப்புக்கள்
அற்ற சமூகமாக
தலித் மக்கள்
வாழ்ந்து
வருவதனாலும்,
இன்றைய
வடமாகான
சனத்தொகையின்
அடிப்படையில்
அங்கு வாழும்
மக்களில்
மூன்றில்
இரண்டு
பகுதியினர்
தலித்
மக்களாகக்
காணப்படுவதனை
கருத்தில்
கொண்டு
அதற்கான
பிரதிநிதித்துவம்
மறுக்கப்படக்கூடாது
என்கின்ற
ஜனநாயக
விழுமியங்களை
கவனத்தில்
கொண்டும்,
வடமாகாணத்திற்காக
ஏற்படுத்தப்படப்
போகின்ற
இடைக்கால
நிர்வாக
சபையில்
தலித்
சமூகத்தின்
பிரதிநிதியாக
குறைந்த
பட்சம்
ஒருவராவது
நியமிக்கப்பட
வேண்டும் என
இம்மாநாடு
பகிரங்க
கோரிக்கை
விடுக்கின்றது
மேற்படி
மாநாட்டின்
தீர்மானங்கள்
அந்த இரு
நாள்
அமர்வுகளிலும்
கலந்துகொண்ட நூற்றுக்கும்
மேற்பட்ட
பேராளர்களின்
முழு
ஒப்புதலோடு
தீர்மானிக்கப்பட்டவை
என்பதை
சகலருக்கும்
அறியத்
தருவதோடு,
எமது
இத்தீர்மானங்களை
நிறைவேற்ற
சர்வதேசமெங்கும்
பரந்து
வாழும் தலித்
உணர்வாளர்களையும்,
முற்போக்கு
சக்திகளையும்
எமது தலித்
சமூக
மேம்பாட்டு
முன்னணி
வினயமாகக்
கேட்டுக்கொள்கிறது.
| |
|