13/07/2008
நல்ல ‘சினிமா’தான்...!!!
‘தசாவதாரம்’
(அசுரா
)

ஒரு
சினிமாவை
விமர்சிப்பதாயின்
அது சார்ந்த
தொழில்முறை
நுட்பங்கள்,
காட்சி
அமைப்புகள்,
நடிப்பு, கதை,
திரைக்கதை
போன்ற
பல்வேறு
துறைகள்
குறித்தும்
பேசவேண்டும்!
அவ்வாறு
பேசுவதனூடகவேதான்
சினிமா
விமர்சனம்
முழுமைபெறும்
என
முழங்குபவர்களும்
உளர்!
தசாவதாரம்
திரைப்படத்தின்
கருத்தியல்
சார்ந்த
வெளிப்பாடுகளுக்கான
உரிமையாளர்
கமல்காசன்
அவர்களே.
பொதுவாகவே
கமல்காசன்
அவர்கள் தான்
ஒரு கடவுள்
மறுப்பாளனாகவும்,
முற்போக்குச்
சிந்தனையாளனாகவும்
அனைத்திற்கும் மேலாக தான் ஒரு பெரியார் தொண்டனெனவும்
நம்பவைக்கும்
சாதுரியம்
கொண்டவர்.
எனவே
இதுவிடயமாக
ஒரு திரைப்பட
விமர்சனம்
எனும் ‘ஒழுங்குமுறையை’
மீறிய ஒரு
கட்டுரையை
எழுத
முனைகின்றேன்.
கமல்காசன்
அவர்கள்
கடவுள்
மறுப்பாளன்
எனக்
கூறிக்கொள்வதில்
உண்மையிருக்கலாம்.
அவரது ஹேராம்,
தசாவதாரம்
போன்ற
திரைப்படங்களின்
அனுபவங்களுடாக
அவர் கடவுள்
மறுப்பாளன்
தான் என
ஊர்ஜிதமாகிறது!!
ஆனால்
கமல்காசன்
அவர்கள்
எந்தக்கடவுளை,
எந்த மதத்தை,
எந்த
பண்பாட்டை
மறுக்கின்றார்
என்பதுதான்
எம்முள்
எழும்
கேள்விகள்!
நிச்சயமாக
அவர்
இந்துமதக்
கடவுள்
மறுப்பாளர்
அல்ல. அதை
தனது
தசாவதாரத்தினூடாகவும்
நிறுவுகின்றார்.
அவரது
இந்துத்துவ
நினைவு
மனவெளியின்
ஆராதனைதான் ‘தசாவதாரம்’.
அரங்கில்
இருள் கவிய
ஒளிக் கீற்று
திரையில்
ததும்ப
காட்சிகள்
விரிகின்றன.
அங்கும் ஓர்
அரங்கம்.
உயிரியல்
விஞ்ஞானி
கோவிந்தராஜன்
கீழ் வருமாறு
உரை
பொழிகின்றான்.
‘’என்
வணக்கத்துக்குரிய
தமிழ் மக்களே,
இந்தியர்களே
மான்புமிகு
அமரிக்க
ஜனாதிபதியும்
இந்தியப்
பிரதமரும்,
தமிழக
முதல்வரும்
அமர்ந்திருக்கும்
சரித்திர
விழாவில்
நானும்
பேசக்கிடைத்த
கதை பெரியகதை
உலகமே
சம்பந்தப்பட்ட
கதை. ஏன் இது
ஒரு
சாமிக்கதையும்
கூட.
பகுத்தறியும்
இந்த
விஞ்ஞானி
சாமிக்கதை
சொல்கிறானே
என்ற கேள்வி
எழலாம்.
இங்கு
கொலுவீற்றிருக்கும்
‘கோவிந்தராஜசாமி’
இக்கதையில்
ஓர் முக்கிய
பாத்திரம்.
அதனால்
இந்தச்
சாமியின்
கதையையும்
சொல்ல
வேண்டியதாயிருக்கிறது.
கோவிந்தராஜருக்கு
நிறைய
முன்கதையுண்டு
அதைச்
சுருங்கச்
சொன்னாலும் 12
ஆம்
நூற்றாண்டுவரையிலாவது
போகவேண்டும்.
சோ, 12ஆம்
நூற்றாண்டு.
ஜேசுவும்,
அல்லாவும்
இந்தியாவிற்குள்
அதன்
அரசியலுக்குள்
புகாத
நூற்றாண்டு.
சிவனும்,
விஷ்ணுவும்
மோதிவிளையாட
வேறுகடவுளர்
இல்லாத காலம்
அதனால்
அவ்விரு
கடவுளரும்
தம்
பக்தர்கள்
வாயிலாக
தம்முள்
மோதிக்கொண்ட
நூற்றாண்டு.‘’
என்பதாக உரை
நீள்கிறது.
இத்திரைப்படப்
பாத்திரங்களான
உயிரியல்
விஞ்ஞானியின்
பெயர்
கோவிந்தராஜன்,
நாயகியின்
பெயர்
ஆண்டாள்.
அரங்கத்தில்
கொலுவீற்றிருக்கும்
விஷ்ணுவின்
கற்சிலை என
யாவும் 12 ஆம்
நூற்றாண்டில்
நிகழ்ந்த
ஓர்
சம்பவத்தை
வலியுறுத்துவதற்காகன
முன்
புலங்கள். 12ஆம்
நூற்றாண்டில்
காஞ்சிபுரம்
எனும் ஊரில்
பிறந்த
பார்ப்பன
கருத்தியலாளரான
இராமானுஜர்
வாழ்ந்த
காலம் (கி.பி.1175-1250 )
தான்
சொல்லப்படும்
12ஆம்
நூற்றாண்டு.
12ஆம்
நூற்றாண்டின்
வைணவ
வரலாற்றை ஒரு
‘சும்மா
வெறும்
பார்ப்பனக்
கமல்காசன்’
சொல்லியிருந்தால்
எமக்கு நேரம்
எவ்வளவோ
மிச்சம்.
ஆனால் கடவுள்
மறுப்பாளன்,
முற்போக்காளன்,
பெரியார்
தொண்டன்
கமல்காசன்
சொல்வதால்தான்
இதை
எழுதவேண்டியுள்ளது.
சிவனும்,
விஷ்ணுவும்
மோதி விளையாட
வேறுகடவுள்கள்
இல்லாத
காலத்தில்,
ஜேசுவும்,
அல்லாவும்
இந்தியாவிற்குள்
நுழைந்ததற்கு
முன்பாகவே
வைணவமதத்திற்கு
சைவமதத்தால்
தொல்லைகள்
நிகழ்ந்ததாகவும்...
‘’யானைக்கும்
சரி
மனிதனுக்கும்
சரி மதம்
பிடித்துப்போனால்
தொல்லைதான்.
இரண்டாம்
குலோத்துங்க
சோழனுக்கு
சைவமதம்
ரெம்பவும்
பிடித்துப்போனது.
மத நெறி
மதவெறியானது.
அதுவரை
தில்லையில்
நடராசருடன்
ஒண்டுக்
குடித்தனம்
நடத்திவந்த
கோவிந்தராசரை
ராஜதி ராஜ
குலசேகர
குலோத்துங்க
சோழன் இடம்
பெயரச்
சொன்னான்.
பெயர்த்து
எடுத்தான்
என்பதே உண்மை‘’
என்றும்
முன்னுரை
வழங்குபவருக்கு
இந்தியாவில்
தோன்றி
இந்தியாவில்
செழித்த
பௌத்தம்
இன்று எங்கே
போனது? மனித
இன
விடுதலைக்குரிய
ஞானத்தை
போதித்த
பௌத்தம்,
யாரால்
நிர்மூலமாக்கப்பட்டது?
கிறிஸ்தவ
காலம்
துவங்குவதற்கு
முன்புவரை
இந்துத்துவ
வேதமதத்தை
தென்இந்திய
மக்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை
என்ற வரலாறு
ஏன் மனதில்
துளிரவில்லை?
அவர்கள்
பௌத்த
மதத்தையும்
சமண
மதத்தையுமே
சார்ந்து
நம்பி
வாழ்ந்தவர்கள
என்பது
வரலாறில்லையா?
வைணவக்
கருத்தியலின்
ஊடாகவே
அவர்கள்
பின்பு
இந்துக்களாக
மாற்றப்படும்
நிலைக்கும்
உள்ளானார்கள்
என்பதும்
உண்மையில்லையா?.
பல்வேறுபட்ட
பண்பாடுகளையும்;,
தனித்துவமான
நாகரீகமுடைய
பிரிவினர்
அனைவரையும்
உள்வாங்கி
மேலாதிக்கம்
செலுத்திவரும்
பண்பாடக
இன்றுவரை
நிலைத்து
நிற்பது
இந்துத்துவப்பண்பாடேயாகும்.
அப்பண்பாட்டின்
அடித்தளமாக
இருப்பது
வைணவக்
கருத்துக்களேயாகும்.
இப்படியிருக்க
12 ஆம்
நூற்றாண்டுத்
‘துளி’
நிகழ்வான
வைணவமத
எதிர்ப்பையும்,
பார்ப்பனக்
குருவான
நம்பிராஜ
நம்பியின்
அவலத்தையும்
சொல்லுவதற்கான
தேவை என்ன
இருக்கிறது
இந்த
பெரியார்
தொண்டனுக்கு.
காட்சி
ஒன்றில்
பாலத்திலிருந்து
கோவிந்தராஜன்
எனும்
உயிரியல்
விஞ்ஞானி
லொறி ஒன்றில்
விழுகின்றபோது.
அந்த
லொறியில்
எழுத்தப்பட்ட
வாக்கியமான
sri
ramajam எனும்
வாக்கியம்
பெரிதுபடுத்திக்காட்டப்படுவதன்
நோக்கமென்ன..!!
அதுமட்டுமா
நாயகி
ஆண்டாள் ‘முகுந்தா...
முகுந்தா...
கிருஸ்ணா
முகுந்தா...
முகுந்தா..’
என்ற பாடலில்
‘மங்கைக்கு
என்றும் நியே...
மணவாளனே...’
எனும்
வரிகளைப்
பாடும்போது
கிருஸ்ணன்
அருச்சுனனுக்கு
கீதை
உபதேசமுரைக்கும்
காட்சி ஒன்று
சுவரில்
தொங்குகிறது.
அக்காட்சியிலிருந்து
கிருஸ்ணனாக
கோவிந்தராஜன்
எனும்
உயிரியல்
பகுத்தறிவு
விஞ்ஞானி
வெளிவரும்
புனைவின்;
நோக்கமென்ன
இந்த
பெரியார்
தொண்டனுக்கு.
இந்திய
துணைக்கண்டத்திலும்
இந்துத்துவப்
பண்பாட்டைப்
பேணுகின்ற
பிறநாடுகளிலும்
உரிமைகள்
பறிக்கப்பட்ட,
தாழ்த்தப்பட்ட,
சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட
கோடிக்கணக்கான
மக்களிடம் ‘கிடைப்பதில்
மன நிறைவு
பெற்று’
எதிர்த்து
கேள்விகேட்காது
அமைதியுடன்
அனைத்தையும்
ஏற்றுக்கொள்ளும்
மனப்பான்மையை
வளர்த்துக்கொள்ளவும்
விரக்தியுற்றுப்போன
சமூகத்தை
கிளர்ந்தெழ
விடாமல்
அடைக்கி
வைத்துக்
கொள்வதற்கும்,
வர்ணாச்சிரம
சாதியக்
கோட்பாட்டையும்
பார்ப்பனக்
புரோகிதக்
கூட்டத்தினரால்
இனறுவரை
கட்டிப்பாதுகாத்து
வருவதுதான்
இந்துமதம்.
இந்த இந்து
மதத்திற்கும்
நிறையவே
முன்கதைகள் உண்டு. அவைகளையும்
சுருங்கச்
சொல்லிவிட
முடியாது.
சைவம் வைணவம் என்பதெல்லாம் இந்து மதத்திற்குள் செரித்துப்போன காலமும் தொலைந்து போய்விட்டது.
‘’12ஆம்
நூற்றாண்டு
ஜேசுவும்,
அல்லாவும்
இந்தியாவிற்குள்
அதன்
அரசியலுக்குள்
புகாது
நூற்றாண்டு.‘’
என வைணவ
மதத்திற்கு
நிகழ்ந்த
சம்பவம்
பற்றிக்குறிப்பிட
முனைகின்றார்.
வைணவச்
சூழ்ச்சியால்
பௌத்த
மதத்திற்கு (சிந்தனைக்கு)
ஏற்ப்பட்ட
அவலமே
இனறுவரையான
இந்திய
பண்பாட்டுக்
கலாச்சார
சிதைவிற்கான
காரணமாகும்.
இந்தியாவின்
பண்பாட்டுச்
சிதைவானது
சங்கரர்
வாழ்ந்த கி.பி.9ஆம்
நூற்றாண்டில்
ஆரம்பமாகின்றது.
அக்காலகட்டத்தில்
பார்ப்பனர்கள்
பௌத்த மதத்தை
ஆபத்தாகவே
கருதினர்.
இந்தியர்களது
மனத்திலிருந்து
பௌத்த
நினைவுகளை
முற்றிலும்
துடைத்தெறிய
வேண்டும்
என்பதே
பார்ப்பனர்களது
அன்றைய அவசிய
தேவையாக
இருந்தது.
கேரளத்தில்
காலடி என்ற
ஊரில் பிறந்த
நம்பூதிரிப்
பார்ப்பனராகி
சங்கரர்
அதற்கு
(கி.பி.788-820)
மூலமாகத்
திகழ்ந்தார்.
கி.பி 4ஆம்
நூற்றாண்டில்
இயற்றப்பட்டதாகக்
கூறப்படும்
பகவத்
கீதைக்கு
புதிய
விளக்கவுரையை
சங்கரர்
எழுதினார்.
அதுவே
இன்றுவரையான
பகவத்கீதையின்
விளக்கவுரையாகத்
திகழ்கின்றது.
சங்கரர்
வாழ்ந்த
காலத்தில்
இந்தியாவில்
பௌவுத்தம்
முழுவதுமாக
அழிந்து
விடவுமில்லை.
இந்தியாவைவிட்டு
வெளியேறிடவுமில்லை.
சங்கரரது
இறப்புக்கும்
இராமானுஜரது
பிறப்பிற்கும்
இடைப்பட்ட
முன்னூறு
ஆண்டுகளில்தான்
இந்திய
மக்களது
அரசியல்
பண்பாட்டு
வாழ்க்கைமுறையில்
நிறைய
மாறுதல்கள்
நிகழ்ந்திருந்தன.
பௌவுத்தம்
இந்தியாவிலிருந்து
முற்றிலும்
அழித்தொழிக்கப்பட்டது.
பௌவுத்தம்
இந்தியாவிலிருந்து
முற்றாக
அழிக்கப்பட்ட
பிற்பாடு
பகுத்தறிவுத்
தத்துவங்களோ,
அறிவார்ந்த
நடைமுறைகளோ
நாட்டிற்குத்
தேவைப்படவில்லை.
புதிய சமூக,
அரசியல்
சூழலில்
வல்லான்
வகுத்த
வழியில்
சரணாகதி
அடைவதும்,
அந்தச்
சரணாகதிக்கு
நியாயம்
கற்பிப்பதுமான
தத்துவமே
தேவையாக
இருந்தது.
அனைத்து
நடைமுறைகளையும்
விட பகவத்
கீதையின்
கடவுளிடம்
சரணாகதி
அடையும்
மார்க்கமே
உயர்வாகக்
கருதப்பட்டது.
இந்த
வழிமுறைக்கு
பிரதான
குருவாக
இருந்தவர்.
கமல்காசனின்
நினைவுமனக்
குருவான 12ஆம்
நூற்றாண்டில்
வாழ்ந்த
இராமானுஜர்
ஆகும். எந்த
வைரசைவிடவும்
பேரழிவாயுதமாக
இந்துப்பண்பாட்டில்
நிலைத்துpருப்பது
வர்ணாச்சிரம
வைரசேயாகும்.
உண்மை
இவ்வாறிருக்க
சைவமதத்தால்
வைணமதத்திற்கு
நிகழ்ந்த
சம்பவத்தையும்..
மனிதகுலத்தை
அழிக்கும்
வைரசையும்
ஒப்பிடமுனைகின்றார்
கதையாசிரியர்
கமல்காசன்.
இவர் கடவுள்
மறுப்பாளனாகவும்,
பெரியார்
சிந்தனையை
மதிப்பவருமாக
இருந்தால்
பௌத்த மதமும்
அதன்
சிந்தனைகளும்
எவ்வாறு,
யாரின்
சூழ்ச்சியால்
இந்தியாவில்
வேரோடு
அழித்தொழிக்கப்பட்டது
என்ற
வரலாற்றையல்லவா
அம்பலப்படுத்தியிருக்க
வேண்டும். 12ஆம்
நூற்றாண்டில்
சைவமத
அபிமானியான
குலோத்துங்க
மன்னனால்
கடலில்
மூழ்கடிக்கப்பட்ட
விஷ்ணுவின்
கற்சிலையானது
2004 இல் ஏற்பட்ட
சுனாமியால்
கரை
ஒதுங்குவதான
காட்சியை
எதற்காக
விலியுறுத்த
முனைகின்றார்.
கதாநாயகியான
ஆண்டாள் ‘’நீங்கள்
இப்பவாவது
கடவுள்
இருப்பதை
ஒத்துக்கொள்ளுங்கள்’’
எனக்கேட்கும்
போது, ‘’கடவுள்
இல்லையெண்டு
நான் எங்க
சொன்னன்,
இருந்தால்
நல்லதெண்டுதானே
சொன்னேன்‘’
என்று
பகுத்தறிவு
விஞ்ஞானி
சொன்னதன்
பிற்பாடே
சுனாமியால்
கரையொதுங்கிய
கற்சிலை
காட்டப்படுகின்றது.
அதற்கான
நியாயமென்ன?
’' ஆத்து
மண்ணைத்
திருடுவது
குற்றம்
தேசத்துரோகம்,
பூமித்
துரோகம்
நமக்கிருப்பது
ஒரு வீடு
இந்த உலகம்.... ...இதுல
என்ன இருக்கு
நான்
மண்ணுக்காகச்
சாவன்.‘’ என்று
பூவராகன்
எனும் ஒரு
தலித்
பாத்திரத்தை
சொல்ல
வைக்கின்றார்.
அதுமட்டுமா
கமல்காசனின்
அயோக்கியத்தனம்.!!
உயர்சாதிக்
குழந்தைகளைக்
காப்பாற்றிவிட்டு
பூவராகன்
எனும் தலித்
சுனாமி அலைச்
சுருளுக்குள்
மூழ்கி
அழிந்தும்
போகின்றான்.
வர்ணக்
கோட்பாடு
என்னும்
விலங்கினால்
சுற்றி
இறுக்கப்பட்டு;,
நான்
இந்தியன்,
நான் இந்து,
நான் தமிழன்
என்ற
கற்பிதங்களால்
ஏமாற்றப்பட்டு,
ஆயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாக
அடிமைப்படுத்தப்பட்டு
வாழ்ந்த
சமூகங்கள்
இன்று நாம்
தலித்துக்கள்
என்று தலை
நிமிர்ந்து
நிற்கிறது.
மேற்படி
அனைத்துப்
புனைவுகளிற்கும்
பின் புலமாக
உள்ள
பார்ப்பனியச்
சதியையும்
அம்மணமாக்கிய
தத்துவமாக
தலித்தியம்
துலங்குகின்றது.
இந்துத்துவ
சக்திகள்
ஏனைய
சாதியினரைக்
களப்பலியாக்கிவிட்டு
எவ்வித
இழப்புமின்றி
தாம்
தந்திரமாக
ஒதுங்கிக்
கொளவர். இந்த
வேலையைத்தான்
பார்ப்பனக்
கமல்காசன்
தசாவதாரத்தில்
வின்சன்
பூவராகன்
என்ற தலித்
பாத்திரத்தின்
மூலமாக
நினைவுறுத்துகின்றார்.
மேலும் பார்ப்பானால் விளையும் காரியம் முற்போக்கானதாய் தெரியுமாயின் அதற்குரிய காரணம
அவன் புத்தி
சுயாதீனம்
அற்றவனாகத்தான்
இருப்பானே
ஒழிய
புத்தியுள்ள
பார்ப்பான்
வலு கவனமாகவே
இருப்பான்
என்பதையும்
நிரூபிக்கின்றது
தசாவதாரம்.
இறுதிக்
காட்சியில் ‘’அவன்
என்ன சாதியோ
என்ன இளவோ
நீங்கள்
அவனைத்
தொட்டு
தீட்டெல்லாம்
பட்டுக்காதேங்கோ‘’
என்று
புத்தியுள்ள
பார்ப்பான்
சொல்ல ‘’போடா..போடா
சாதிப்
பிசாசே இது
என்ர பிள்ளை
ஆராமுதமெல்ல...
கிருஸ்ணவேனி
சிறீனிவாசனின்
பிள்ளை‘’
என்று புத்தி
சுயாதீனமற்ற
ஒரு
பாப்பாத்திக்
கிழவி மூலமாக
சொல்லி
நிரூபிக்கின்றார்
பார்ப்பான்
கமல்காசன்.
பகுத்தறிவாளர்களையும்,
பொருள் முதல்
வாதிகளையும்
தங்கள்
பக்கம்
ஈர்ப்பதற்காக
பார்ப்பனர்களின்
முக்கிய
எதிரியான
கவுதம
புத்தர்
இந்துக்
கடவுளான
விஷ்ணுவின்
ஒன்பதாவது
அவதாரமாக
அறிவிக்கப்பட்டார்.
மீன் அவதாரம்,
ஆமை அவதாரம்,
பன்றி
அவதாரம்
வாமனர்,
பரசுராமர் என
இரண்டு
பார்ப்பன
அவதாரம்,
இராமன்,
கிருஸ்ணன்,
புத்தர் என
மூன்று
சத்திரிய
அவதாரம் என
ஒன்பது
அவதாரம் என
எடுத்தவர்
விஷ்ணுபகவான்.
அவரின்
பத்தாவது
அவதாரமான
கலியுக
அவதாரத்தை
காண்பதற்காக
நாம்
காத்திருக்கும்
வேளையில்
மிஸ்டர்
பார்ப்பன
கமல்காசன்
தசாவதாரமான (பத்தாவது)
கலியுக
அவதாரமும்
எடுத்து
எம்மை
கிலிகொள்ள
வைத்துவிட்டார்.
இவருடைய
இந்துத்துவ
மைய
வாதத்துடன்
ஏகாதிபத்திய
மையவாதமும்
இணைந்த ஒரு
படைப்பாகவே
இத்
திரைப்படம்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
கட்டுரையின்
சுருக்கம்
உணர்ந்து
கமல்காசனின்
ஏகாதிபத்திய
மனவெளியை
தசாவதாரத்திலிருந்து
உருவிக்
காட்டுவதை
தவிர்த்துள்ளேன்.
இறுதிப்பாடலான
‘’உலகம்
எங்கிலும்
உன்னை
மிஞ்சிட யா...ரு.‘’
எனும் தொடக்க
வரிக்குரியவராக
ஜோர்ஜ் புஸ்
அவர்களையே
காட்டப்படுவதன்
நோக்கம்
பற்றியும்
நாம்
சிந்திக்க
வேண்டியுள்ளது.
இறுதியாக கனம் பார்ப்பன கமல்காசன் அவர்களுக்கு தந்தை பெரியாரின் கீழ்வரும் ‘சுடு’ வாக்கியங்கள் சிலவற்றை காணிக்கையாக்குவோம்.
‘’இந்து மதத்தையும், பகவத் கீதையையும், கிருஸ்ண பகவானையும் உண்மை என நம்பிக் கொண்டிருக்கும் ஒருவன் தீண்டாமையையும், சூத்திரப் பட்டத்தையும், பாதத்திலிருந்து உற்பத்தியான வருணத்தையும் எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்கின்றேன்.‘’ (குடி அரசு 23-6-1935)... ‘’ இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும் சாதி வித்தியாச ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100க்கு 100 பேரும் கீதை, மனுதர்ம
சாஸ்திரம் ஆகியவற்றைநம்பும்-ஆதரிக்கும் சோணகிரிகளேயாவார்கள்.‘’ (குடி அரசு 28-7-1935)
இராமர் சிலைக்கு செருப்பால் அடித்தவர் பெரியார். ‘தசாவதாரத்திற்கு’ நாம் காறித் ‘தூ..’ எண்டு
துப்பலாமா?
